படிப்பதற்கு வயது தடையில்லை... 105 வயதில் 4-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மூதாட்டி!

படிப்பதற்கு வயது தடையில்லை... 105 வயதில் 4-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மூதாட்டி!
பகீரதி அம்மாள்
  • News18
  • Last Updated: February 6, 2020, 12:30 PM IST
  • Share this:
கேரளாவில் 105 வயது மூதாட்டியான பகீரதி அம்மாள், நான்காம் வகுப்பு தேர்வெழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பகீரதி அம்மாள், தனது தாயார் மறைவால் 3-ம் வகுப்புடன் பள்ளிக்கல்வியை நிறுத்தி விட்டார். அதன் பின்னர் படிப்பை தொடர முடியாமல் போகவே, கணவர் மறைவைத் தொடர்ந்து 6 குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார்.

குழந்தைகள் பெரியவர்கள் ஆனதை அடுத்து, வயதானவர்கள் கல்வி கற்பதற்கான கேரள அரசு உருவாக்கிய கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்தில் இணைந்தார். அங்கு கல்வி கற்று 4-ம் வகுப்புத் தேர்வை கடந்த நவம்பர் மாதம் எழுதினார்.


இந்நிலையில் நான்காம் வகுப்பு தேர்வில் பகீரதி அம்மாள் 75 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் இனிப்புகளை பகிர்ந்து மகிழ்ச்சியடைந்தனர்.

Also see...
First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்