• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வயதில் சதமடித்த பாட்டிகள் செய்த வியத்தகு சாதனை - அற்புதமான வாழ்க்கை பாடம்..

வயதில் சதமடித்த பாட்டிகள் செய்த வியத்தகு சாதனை - அற்புதமான வாழ்க்கை பாடம்..

குட்டியம்மா

குட்டியம்மா

கேரளா கல்வி அமைச்சர் சிவன்குட்டி இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

  • Share this:
சாதிப்பதற்கு வயது எப்போதும் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்கள் இரண்டு மூதாட்டிகள், எல்லைகள் தாண்டி இவர்கள் உணர்த்தும் செய்தி உழைப்பும் , முயற்சியும் இருந்தால் வானம் வசப்படும் என்பதுதான், அவர்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அயர்குன்னம் பகுதியைச் சேர்ந்த104 வயதான குட்டியம்மா இதற்கு ஓர் சிறந்த உதாரணம் . பள்ளிக்கு சென்றிராத இவர் எழுதப் படிக்கத்தெரியாதவர். 104 வயதில் தேர்வுக்குத் தயாராகும் போது தான் முதன்முறையாக காகிதத்தையும் பேனாவையும் பயன்படுத்த தொடங்கினார் .கணிதம், மலையாளம் போன்றவற்றை பிரதான பாடங்களாகக் கொண்ட எழுத்தறிவுத் தேர்வை எழுதினார். இதில், நூற்றுக்கு 89 மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.கோட்டயத்தில் குட்டியம்மா உள்பட மொத்தம் 516 தேர்வெழுதினர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் குட்டியம்மாதான் இவர்களுள் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். இதில், தேர்ச்சியடைந்தது மூலம், குட்டியம்மா நான்காம் வகுப்பில் சேர்ந்து தனது படிப்பைத் தொடரலாம்.

Also read:   இனி 468 வருஷத்துக்கு அப்புறம் தான் இது நடக்குமாம்.. நவ 19ஆம் தேதி மிஸ் பன்னிடாதீங்க..

காது கேட்கும் திறன் குறைவு என்ற போதிலும் தினமும் காலையிலும் மாலையிலும் தவறாமல் வகுப்பில் கலந்து கொள்வதுடன் இந்த தளராத வயதிலும் கடினமாக உழைத்து அந்த உழைப்பிற்கான பலனை அவர் ஈட்டியிருக்கிறார் என்றால் மிகையல்ல’’
கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்பதை குட்டியம்மா நிருபித்துள்ளார் என்ற தலைப்புடன் கேரளா கல்வி அமைச்சர் சிவன்குட்டி இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.இதே போல் அமெரிக்காவின் லூசியானா பகுதியைச் சேர்ந்த 105 வயது ஜூலியா ஹாக்கின்ஸ் 100 மீட்டர் ஓட்டத்தை வேகமாக நிறைவு செய்து சாதனை புரிந்துள்ளார். 100 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் 02 நொடிகளில் கடந்துள்ளார். 105 வயதில் இந்த ஓட்டத்தில் பங்கேற்ற முதல் அமெரிக்க பெண் என்னும் சாதனையை ஜூலியா படைத்துள்ளார்.

Also read:   Davemaoite: ஆச்சரியத்தில் அறிவியல் உலகம்.. வைரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட உலகில் இதுவரை பார்த்திராத கனிமம்

ஓய்வு பெற்ற ஆசிரியரான ஜீலியா தடகள போட்டிகளில் சிறு வயதில் இருந்தே ஆர்வம் கொண்டவர். அவர் 100 வயதை எட்டியதும், ஸ்பிரிண்டிங்கில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.


இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டில் 100 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் ஒட்டத்தில் சாதனை படைத்திருந்தார் .செப்டம்பரில் அவரது சாதனையை டயான் ப்ரீட்மேன் என்ற மூதாட்டி முறியடித்தபோது, ​​ஹாக்கின்ஸ் புதிய வயது பிரிவில் போட்டியிட முடிவு செய்தார்.

இந்நிலையில் 100 மீட்டர் ஓட்டத்தை வேகமாக நிறைவு செய்தது, தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் வாய்ப்பு கிடைப்பின் இதை மீண்டும் முயற்சிக்க தான் தயராக இருப்பதாகவும் உத்வேகத்துடன் கூறி இருக்கிறார். மூதாட்டியின் ஓட்டத்தைக் கண்டு கூடியிருந்த பலரும் அவருக்கு ஆதரவாக குரலெழுப்பி உற்சாகமூட்டினர்.

சாதிக்க நினைக்கும் மனிதனின் முயற்சிக்கு ஆயிரம் தடைகள் வந்தாலும் . கடின உழைப்பும் முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதே இந்த தள்ளாத வயதிலும் இந்த மூதாட்டிகள் நமக்கு உணர்த்தும் செய்தி .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: