Home /News /national /

உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தை ஏமாற்றும் செயல் - உச்சநீதிமன்றத்தில் வாதம்

உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தை ஏமாற்றும் செயல் - உச்சநீதிமன்றத்தில் வாதம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க மேற்கொள்ளப்பட்ட 103-வது திருத்தம் அரசியல் சாசனத்தை ஏமாற்றும் செயலாகும் என உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi Cantonment, India
    பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, 2019- ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து, youth for equality என்ற அமைப்பு உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    திமுகவின் ஆர்.எஸ், பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு முதலில் முன்னாள் தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் பி.ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ் பி பார்திவாலா மற்றும் பேலா திரிவேதி ஆகியோர், கடந்த வாரம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க மேற்கொள்ளப்பட்ட 103-வது திருத்தின் 3 முக்கிய காரணிகளை ஆய்வு செய்ய தீர்மானித்தனர்.

    இதனை தொடர்ந்து செவ்வாய் கிழமை, அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்ட அறிஞர் ஜி மோகன் கோபால், 103-வது திருத்தம் அரசியல் சாசனத்தை ஏமாற்றும் செயல் என்றும் ஜாதி அடிப்படையில் நாட்டை துண்டாக்குவதே அதன் உண்மை நோக்கம் என்றும் கூறினார்.

    பலவீனமானவர்களைக் காட்டிலும் சலுகை பெற்றவர்களைக் காக்கும் ஒன்றாக அரசியலமைப்பின் அடையாளத்தை மக்கள் மனதில் பதியவைக்கும் என்றும் அவர் வாதாடினார். 103-வது சட்டத் திருத்தம், அரசியலமைப்பு சாசனத்தின் தொலைநோக்கு பார்வையான சமூக நீதியின் மீதான தாக்குதல் என்று கூறிய , ஜி மோகன் கோபால், இடஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டுமே தவிர, பிற்படுத்தப்பட்டவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் ஒன்றாக அமைந்துவிடக் கூடாது என்றும் கூறினார்.

    Also Read: பிரதமர் மோடிக்கு  கிடைத்த  பரிசு பொருட்கள் ஏலம்!! ஏலத்தில் கிடைக்கும் பணத்தை என்ன செய்கிறார் தெரியுமா?

    முன்னோக்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் இடஒதுக்கீடு என்ற கருத்தை அழிக்கும் பின்கதவு முயற்சி என்றும் கூறினார். இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது, ஏகபோகத்திற்கும் வசதி படைத்தவர்களுக்கும் எதிரான ஒன்று என்று குறிப்பிட்ட ஜி மோகன் கோபால். முன்னோக்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது, ஜனநாயகத்தை தன்னலக்குழுவினர் கட்டுப்படுத்தும் நிலைக்கு தள்ளும் என்றும் கூறினார். இந்த வழக்கில் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற உள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Reservation, Supreme court

    அடுத்த செய்தி