Home /News /national /

3வது அலையின் தீவிரம் தொடங்கியது.. டெல்லியில் ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு!

3வது அலையின் தீவிரம் தொடங்கியது.. டெல்லியில் ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு!

ஒமைக்ரான் பாதிப்பு அறிகுறிகள் லேசானதாக தோன்றினாலும், தொற்று பாதிப்பு வேகமாக பரவும் என சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் இன்று ஒரே நாளில் 10,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகும் என்று சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

    கொரோனா பாதிப்பு விகிதம் நேற்று முன்தினம் வரை 6.4 சதவீதமாகவும், நேற்று 8.3 சதவீதமாகவும் இருந்த நிலையில் இன்று 10 சதவீதமாக அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் மூன்றாவது அலை உருவாகியுள்ளது. ஆனால், "டெல்லியைப் பொறுத்தவரை, இது ஐந்தாவது அலை" என்று ஜெயின் கூறியுள்ளார்.

    ஒமைக்ரான் பாதிப்பு அறிகுறிகள் லேசானதாக தோன்றினாலும், தொற்று பாதிப்பு வேகமாக பரவும். அதனால், கொரோனா தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் கண்டிப்பாக டெல்லி மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

    பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் அதனை சமாளிக்கும் வகையில், தனியார் மருத்துவமனைகளில் 40 சதவீத படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஒமைக்ரான் பரவியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். எனினும், அனைத்து மாதிரிகளையும் சோதனைக்கு உட்படுத்துவது சாத்தியமில்லை என்பதால், தற்போது டெல்லியில் இருந்து 300-400 மாதிரிகள் மட்டுமே மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    Also read:  மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள்

    டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் நேற்றைய தினம் 5,481 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    டெல்லியில் கொரோனா பாதிப்புகள் திடீரென அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் அங்கு வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும், அரசு அலுவலர்களும் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும், தனியார் அலுவலகங்களிள் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். நீண்ட வரிசைகள் மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பேருந்துகள் மற்றும் டெல்லி மெட்ரோ முழு அளவில் இயக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    Also read:   வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏவுக்கு ஷாக் கொடுத்த தொகுதி மக்கள்..
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Delhi, Omicron

    அடுத்த செய்தி