Home /News /national /

கூகுளை பார்த்துவிட்டு வந்து சந்தேகம் கேட்டால் ரூ.1000 தனிக் கட்டணம் - அசர வைக்கும் மருத்துவர்

கூகுளை பார்த்துவிட்டு வந்து சந்தேகம் கேட்டால் ரூ.1000 தனிக் கட்டணம் - அசர வைக்கும் மருத்துவர்

ட்விட்டரில் வைரலாகும் பதிவு

ட்விட்டரில் வைரலாகும் பதிவு

மருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு வித்தியாசமான கட்டணங்களை வகுத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஆன்லைன் மருத்துவம் என்ற முறை இன்றைய இன்டெர்னெட் யுகத்தில் வாடிக்கை ஆகி விட்டது. யாருக்காவது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக கூகுளைத் தட்டி தன்னுடைய வியாதியை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து அதற்காக மருத்துகளை தேடி பார்க்கும் வழக்கம் நம்மவர்களிடையே அதிகரித்துள்ளது. மக்களின் இந்த செயல்பாட்டிற்கு தொழில்முறை மருத்துவர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து எச்சரிக்கை வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு நபருக்கு நோய் தன்மை என்பது தனித்துவமான ஒன்று. எனவே, மருத்துவரை உரியமுறையில் நாடாமல் தானாகவே மருத்துவம் செய்து கொள்வது என்பது சரியல்ல என தொடர்ந்த வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு உதாரணமாக மருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு வித்தியாசமான கட்டணங்களை வைத்து விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார். இவர் உருவாக்கியுள்ள கட்டண முறை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கவுரவ் டால்மியா என்ற நபர் இந்த கட்டண முறை தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.



    இதில் மருத்துவர் ஒருவர் தன்னிடம் வரும் வெளி நோயாளிகளுக்கான மருத்துவ கட்டணத்தை பட்டியலிட்டுள்ளார். அதில், நான் நோயை கண்டறிந்து, நான் சொல்லும் சிகிச்சை என்றால் ரூ.200 கட்டணம், நான் நோயை கண்டறிந்து, நீங்கள் சொல்லும் சிகிச்சை என்றால் ரூ.200 கட்டணம், உங்கள் கூகுள் சந்தேகங்களுக்கு ரூ.1000 கட்டணம், நீங்கள் நோயை கண்டறிந்து, நான் சொல்லும் சிகிச்சை என்றால் ரூ.1500 கட்டணம், நீங்கள் நோயை கண்டறிந்து, நீங்கள் சொல்லும் சிகிச்சை என்றால் ரூ.200 கட்டணம் என அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சைபர் குற்றங்களால் அதிகமான பாதிப்படைந்த நபர்களின் பட்டியலில் இந்தியாவின் இடம் பற்றிய அதிர்ச்சி தகவல்!

    யாரோ ஒரு டாக்டர் வசமாக பாதிக்கப்பட்டு அதன் விளைவாகவே தான் இந்த கட்டண முறையை உருவாக்கியுள்ளதாக பதிவுக்கு நெட்டிசன்கள் கமெண்டுகளை அள்ளி விடுகின்றார்கள்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Doctor, Twitter, Viral

    அடுத்த செய்தி