மும்பை : 100-வது பிறந்தநாளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்

மும்பை : 100-வது பிறந்தநாளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்

Parvati Khedkar

பந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர், கேக்கினை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதனையடுத்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உடையவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த 100 வயது பெண் ஒருவர் தனது 100 வது பிறந்தநாளில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பகுதியில் பார்வதி கெட்கர் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் 1921-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ம் தேதி பிறந்தவர். கடந்த வெள்ளிக்கிழமை தனது பிறந்தநாளை கொண்டாடும் அதே வேளையில் பந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர், கேக்கினை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கைகள் உயர்ந்து வருவதற்கு மத்தியில் வயதானவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில் 1.94 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் 90,055 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் 22 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரை கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா வைரஸால் பாதிப்படைந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா தான் முதன்மையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  கொரோனா வைரஸின் தாக்கம் மகாராஷ்டிராவில் எந்த அளவு உள்ளது என்பதை அறிய மூன்று உறுப்பினர்கள் கொண்ட மத்திய குழு ஒன்று அம்மாநிலத்திற்கு மத்திய அரசு சார்பாக சென்றது. திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் மக்கள் கூட்டம், கிராம பஞ்சாயத்து தேர்தல்களின்போது ஏற்பட்ட கூட்டம், மிகவும் நெரிசலாக காணப்படும் பொது போக்குவரத்து ஆகியவற்றின் காரணமாக இந்த வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அவரசு அனுப்பிய குழுவானது அமராவது, நாக்பூர், புனே, தானே, மும்பை ஆகிய முக்கிய இடங்களில் ஆய்வை மேற்கொண்டது.
  Published by:Ram Sankar
  First published: