மேகதாது அணையை கட்டியே தீருவோம்- கர்நாடக உள்துறை அமைச்சர் பிடிவாதம்!

பசவராஜ் பொம்மை

.  மேகதாது அணையை கட்ட வும்  மக்களின்  விருப்பத்தை பாதுகாப்பதற்கு கர்நாடக அரசுக்கு  உரிமை உள்ளது.  இந்திய அரசு கர்நாடகாவின்  கோரிக்கையை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

  • Share this:
மேகதாதுவில் நிச்சயம்  அணையை  கட்டியே தீருவோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கையில் அணை கட்டும் நடவடிக்கையில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது.  கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தமிழக அரசு மேகதாது அணைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

எனினும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக தீர்மானமாக உள்ளது. அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவும் இதனை தொடர்ந்து கூறி வருகிறார். பெங்களூரு நகரத்தின் குடிதண்ணீர் வசதிக்காகவே உச்ச நீதிமன்ற அனுமதியின்படி மேகதாது அணை கட்டப்படுகிறது என்றும், எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார்.

இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக அனைத்துக் கட்சிகளும் உறுதி!


மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. மேலும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். இதேபோல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு எதிராகவும், மேகதாது அணைக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: மேகதாதுவில் அணைகட்ட கூடாது - ஜி.கே மணி...


இந்நிலையில், ஏ.என்.ஐ. ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை,  தமிழக அரசு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.  எனினும், உச்ச நீதிமன்றம் எந்த தடையை விதிக்கவில்லை.  மேகதாது அணையை கட்ட வும்  மக்களின்  விருப்பத்தை பாதுகாப்பதற்கு கர்நாடக அரசுக்கு  உரிமை உள்ளது.  இந்திய அரசு கர்நாடகாவின்  கோரிக்கையை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் காவிரி தீர்ப்பாய வாரியம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறது.  எனவே, எல்லாம் தீர்ந்துவிட்டது,  இந்த திட்டத்தை கர்நாடக அரசு நிறுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. 100 சதவீதம் மேகதாது திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு  கர்நாடக அரசுக்கு நீதி வழங்கும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.
Published by:Murugesh M
First published: