ஹோம் /நியூஸ் /இந்தியா /

பூஸ்டர் டோஸ் போட ஆர்வம் காட்டாத மக்கள்.. காலாவதியான 10 கோடி தடுப்பூசி டோஸ்கள் அழிப்பு

பூஸ்டர் டோஸ் போட ஆர்வம் காட்டாத மக்கள்.. காலாவதியான 10 கோடி தடுப்பூசி டோஸ்கள் அழிப்பு

10 கோடி கொரோனா தடுப்பூசி வீணானது

10 கோடி கொரோனா தடுப்பூசி வீணானது

தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாததால் 10 கோடி தடுப்பூசிகள் வீணாகி அழிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  சீனாவின் வூஹான் பகுதியில் 2019ஆம் ஆண்டு இறுதியில் கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கி, பின்னர் அங்கிருந்து உலகம் முழுவதும் பரவியது. இரண்டே மாதங்களில் உலக நாடுகள் முழுவதும் பரவி பெருந்தொற்றாக மாறிய கொரோனாவை எதிர்கொள்ள லாக்டவுன் அறித்து ஒட்டுமொத்த உலகமே முடக்கம் கண்டது. இந்த பெருந்தொற்றுக்கு உரிய மருந்து இல்லாத நிலையில், பாதிப்பை எதிர்கொள்ள பெரும் பாதுகாப்பு அரணாக திகழ்ந்தது தடுப்பூசி தான்.

  இந்தியாவில் முதல் கட்டமாக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோட்டெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அரசு முதல் கட்டமாக மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் என திட்டம் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், கடந்தாண்டு மே மாதம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

  கோவிட்-19 அலை ஓய்ந்து இந்தாண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளை அரசு தொடங்கியது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்த அரசு அனுமதி அளித்தது.இருப்பினும் நோய் பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதால் மக்களிடம் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள ஆர்வம் இல்லை. எனவே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் புதிதாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதில்லை என முடிவெடுத்தது.

  இதையும் படிங்க: ஆமைக்கறி வறுவலை சரியாக சமைக்காத மனைவியை அடித்தே கொன்ற கணவர்... அதிர்ச்சி சம்பவம்!

  இந்த சூழலில் சீரம் நிறுவனம் தயாரித்த 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் காலாவதியாகி வீணடைந்து விட்டதாக அந்நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.அந்நிறுவனம் கடந்த டிசம்பர் மாதமே தடுப்பூசி உற்பத்தியை நிறுத்திவிட்டதாகவும், கொரோனாவால் மக்கள் சலிப்படைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். எனவே பூஸ்டர் டோஸ் போட மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறிய அவர், கடந்த மாதம் காலாவதியான 10 கோடி கோவீஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் அழிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Covishield