• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதிய இந்தியாவின் பிம்பத்தை 100 கோடி டோஸ் மைல்கல் பிரதிபலிக்கிறது - பிரதமர் மோடி புகழாரம்

புதிய இந்தியாவின் பிம்பத்தை 100 கோடி டோஸ் மைல்கல் பிரதிபலிக்கிறது - பிரதமர் மோடி புகழாரம்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

நாடு முழுவதும் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை எட்டி மத்திய சுகாதாரத்துறை வரலாறு படைத்துள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார்.

  • Share this:
    கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போரை ஜனவரி 16-ம் தேதி மத்திய அரசு தொடங்கியது. முதல் 10 கோடி தடுப்பூசிகளை 85 நாட்களிலேயே செலுத்தி சுகாதாரத்துறை சாதனை படைத்தது. செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் மட்டும் இரண்டரை கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
    அதன் பின்னர் தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்தும் வேகம் அதிகரித்து தற்போது 9 மாதங்களில் 100 கோடி டோஸ் என்ற இலக்கை எட்டி புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

    இது அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகமாகும். ஜப்பானை விட 5 மடங்கும், ஜெர்மனியை விட 9 மடங்கும், பிரான்சை விட 10 மடங்கு தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தபட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சீனா மட்டுமே 100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை எட்டியிருந்த நிலையில், தற்போது இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

    நாடு முழுவதும் 100 கோடி கொரோனா தடுப்பூசியை செலுத்தி சாதனை படைக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி மக்களிடம் இன்று உரையாற்றினார். அப்போது,

    நாட்டு மக்களின் கூட்டு முயற்சியில் தான் 100 கோடி டோஸ் என்பது சாத்தியமானது. 100 கோடி டோஸ் தடுப்பூசி என்பது தொடக்கம் தான். புதிய இந்தியாவின் விடா முயற்சி மற்றும் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி இது. மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் தடுப்பூசியை எப்படி பெறுவார்கள், எப்படி செலுத்துவர்கள் என்ற கேள்விகள் எழுந்தன. எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் 100 கோடி டோஸ் என்ற சாதனை பதிலளித்துள்ளது.

    உலகளவில் மருந்து தயாரிப்பில் இந்தியாவிற்கு சிறந்த இடம் கிடைத்துள்ளது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி எனற் திட்டத்தை கொண்டுவந்து இந்த சாதனையை எட்டியுள்ளோம். கடைக்கோடி மக்களுக்கும் தடுப்பூசி செல்வதை அரசு உறுதி செய்துள்ளது. விளக்கு ஏற்றுவது, கைத்தட்டுவது எல்லாம் தடுப்பூசி செலுத்த எப்படி உதவும் என விமர்சனம் எழுந்தது. ஆனால் அவை எல்லாம் மருத்துவத்துறையை சேர்ந்தவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: