முகப்பு /செய்தி /இந்தியா / 10 கவுன்சிலர்களை ரூ.100 கோடிக்கு விலைக்கு வாங்க பாஜக திட்டம்.. ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

10 கவுன்சிலர்களை ரூ.100 கோடிக்கு விலைக்கு வாங்க பாஜக திட்டம்.. ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சியில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெல்லியில் உள்ள 10 கவுன்சிலர்களை 100 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்க பாஜக திட்டமிட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சியில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. 104 இடங்களை பாஜக கைப்பற்றியது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் 10 கவுன்சிலர்களை 100 கோடி ரூபாய்க்கு வாங்க பாஜக முயற்சித்ததாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: 11 ஆண்டுகளில் 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேற்றம் - மத்திய அரசு தகவல்

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கவுன்சிலர்கள், மஹாராஷ்டிரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களைப்போல டெல்லியிலும் குதிரை பேரம் நடத்த பாஜக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினர். 10 கவுன்சிலர்களுக்கு தலா 10 கோடி வீதம் 100 கோடி ரூபாய் வழங்கி அவர்களை பாஜகவில் இணைக்க முயற்சிகள் நடைபெற்றதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

First published:

Tags: Aam Aadmi Party, BJP