Home /News /national /

நட்புனா என்னனு தெரியுமா? இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிய குவைத் - என்ன செய்தது தெரியுமா?

நட்புனா என்னனு தெரியுமா? இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிய குவைத் - என்ன செய்தது தெரியுமா?

சுதந்திர தினத்தை கொண்டாடிய குவைத்

சுதந்திர தினத்தை கொண்டாடிய குவைத்

சுதந்திர காற்று பட்டிதொட்டி எங்கும் பரவிய நிலையில் குவைத்தும் தனது பங்கிற்கு இந்தியாவிற்கும் , குவைத்திற்கும் இடையேயான நட்பினை வெளிப்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்திய நாட்டிற்கும் அரபு நாடான குவைத் நாட்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக குவைத் அரசாங்கம் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிய விதம்
    பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    குவைத் அரசாங்கம் இந்தியாவின் 75 வது சுதந்திர அமிர்த பெருவிழாவை முன்னிட்டு மூவர்ண கொடி நிறத்தில் 100 பேருந்துகளை பயன்பாட்டுக்கு அளித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.  இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குவைத் இந்திய தூதரகத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் இந்தியாவிற்கும் , குவைத்திற்கும் இடையே உள்ள 60 ஆண்டு கால பந்தத்தை குவைத் அரசாங்கம் வெளிப்படுத்தும் விதமாக குவைத் பொதுப் பேருந்துகளில் இந்திய கொடியை விளம்பரம் செய்துள்ளது.



    இந்த பஸ்களை இந்திய தூதர் சிபி ஜார்ஜ், குவைத் அரசின் தகவல் தொடர்புத்துறை துணைச் செயலாளர் மசின் அல் அன்சாரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



    நேற்றைய தினம் நாடுமுழுவதும் இந்திய சுதந்திர தினம் கோலகமாக கொண்டாடப்பட்டது. ஆட்டோ , டீ கடை பெஞ்ச் , பாராளுமன்றம் , பொதுமக்கள் வீடுகள் , வாட்ஸ் ஆப் டிபி , பள்ளிகள் , கல்லூரிகள் , நீர்வீழ்ச்சிகள் , என காணும் இடமெல்லாம் இந்திய கொடி பட்டொளி வீசி பறந்தது.



    இந்தியாவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை ட்விட்டரில் பரிமாறினர். இவ்விதம் இந்தியாவில் சுதந்திர காற்று பட்டிதொட்டி எங்கும் பரவிய நிலையில் குவைத்தும் தனது பங்கிற்கு இந்தியாவிற்கும் , குவைத்திற்கும் இடையேயான நட்பினை வெளிப்படுத்தும் விதமாக தங்கள் நாட்டு பேருந்துகளில் இந்திய கொடி நிறத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Independence day, Kuwait

    அடுத்த செய்தி