ஹோம் /நியூஸ் /இந்தியா /

10 வயது சிறுவனை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சக நண்பர்கள்... சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

10 வயது சிறுவனை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சக நண்பர்கள்... சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான 10 வயது சிறுவன்

கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான 10 வயது சிறுவன்

பாதிக்கப்பட்ட சிறுவன் ஆபத்தான நிலையில் டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  12 வயது சிறுவனை அவனது நண்பர்களே கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

  தலைநகர் டெல்லியில் சீலாம்பூர் என்ற பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுவன் கடந்த 18ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த 4 பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நான்கு பேரும் 10-12 வயதான ஆண் சிறார்களே. இவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட சிறுவனின் நண்பர்கள் ஆவர். சம்பவத்தன்று சிறுவனை கட்டாயப்படுத்தி செங்கல் மட்டும் குச்சிகளால் தாக்கி பாலியல் வன்புணர்வு செய்த நான்கு பேரும், சிறுவனை படுகாயங்களுடன் சம்பவயிடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர்.

  அவர்கள் சிறுவனின் அந்தரங்க பகுதிகளில் கம்பிகளை செலுத்தி வன்கொடுமை செய்துள்ளது மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி மகளிர் ஆணையம் இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

  இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சாலையில் 2 கி.மீ. நிர்வாணமாக நடந்து சென்ற அவலம் - உ.பியில் நடந்த கொடூரம்

  ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால், "இது மிகவும் அதிர்ச்சி தரும் பயங்கரமான நிகழ்வாகும். டெல்லியில் பெண்கள் மட்டுமல்ல, ஆண் சிறார்களும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதை இது உணர்த்துகிறது. இது தொடர்பாக எங்கள் குழு எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்" என்றார். குற்றச்சம்பவம் தொடர்பாக போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை வழக்கில் ஒரு சிறாரை கைது செய்து சிறார் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள மற்றவர்களை காவல்துறை தேடி வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுவன் ஆபத்தான நிலையில் டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Crime News, Delhi, Gang rape, Pocso, Rape case