Home /News /national /

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தம்பியின் உடலை தூக்கி நடந்த 10 வயது சிறுவன்.. உ.பியில் அவலம்

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தம்பியின் உடலை தூக்கி நடந்த 10 வயது சிறுவன்.. உ.பியில் அவலம்

2 தம்பியின் உடலை தூக்கிச் சுமந்த சிறுவன்

2 தம்பியின் உடலை தூக்கிச் சுமந்த சிறுவன்

மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் 2 வயது குழந்தையின் உடலை அவரது 10 வயது சகோதரன் கையிலேயே தூக்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்த அவலம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India
    உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் ஷாமிலி மாவட்டத்தில் கூலித் தொழிலாளராக வேலை பார்க்கிறார். இவரது 2 வயது குழந்தை கார் மோதி சாலை விபத்தில் இறந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், டெல்லி-சஹ்ரான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் குழந்தையை அவரது வளர்ப்புத் தாய் சீதா தூக்கிக்கொண்டு சென்றுள்ளார்.

    அப்போது குழந்தை விடாமல் அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாய் சீதா தான் கார் மேல் தள்ளிவிட்டு விபத்தை ஏற்படுத்தி கொலை செய்துள்ளார். இதை அருகே இருந்தவர்கள் பார்த்து காவல்துறையிடம் தெரிவித்த நிலையில், வளர்ப்புத் தாய் சீதா கைது செய்யப்பட்டார். குழந்தை பரிதாபத்திற்குரிய முறையில் உயிரிழந்த நிலையில், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவம் தான் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குழந்தையின் உடற்கூறு ஆய்வு பாக்பத் மாவட்ட அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. அடுத்த நாள் குழந்தையின் உடலை பெற்றுக் கொள்ள குழந்தையின் தந்தை பிரவீன் குமார், குழந்தையின் 10 வயது சகோதரன் சாகர் குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

    மருத்துவமனையில் இருந்து தனது கிராமம் 50 கிமீ தொலைவில் உள்ளதால் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் அல்லது வாகனம் ஏற்படு செய்து தர தந்தை பிரவீன் வேண்டுகோள் வைத்துள்ளார். ஆனால், மருத்துவமனை அதற்கு ஏற்பாடு செய்து தரவில்லை. இதையடுத்து வேறு வழியின்றி குழந்தையின் உடலை வெள்ளைத் துணியால் சுற்றி, அவரது 10 வயது அண்ணன் சாகர் கைகளில் தூக்கிக் கொண்டே சாலையில் நடக்கத் தொடங்கினார்.


    இந்த காட்சி அங்கிருந்தோரை பார்ப்போரை வைக்கும் படி இருந்த நிலையில், அதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இதை அடுத்து சிறிது நேரத்தில் விவரம் மாவட்ட மருத்து அதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற நிலையில், பின்னர் அவர்கள் வாகனத்திற்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. பல முறை கேட்டு ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தால் குழந்தையை தான் தூக்கி நடக்கத் தொடங்கியதாக தந்தை பிரவீன் கூறியுள்ளார். தனக்கு கை வலித்ததால் தான் அடுத்து தனது 10 வயது மகனை உடலை எடுத்து வந்தான் என விளக்கமளித்துள்ளார்.

    இதையும் படிங்க: திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய பெண்ணை கூலிப்படை வைத்து கொன்ற காதலன்.. கள்ளக் காதலால் விபரீதம்

    இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என பாக்பத் மாவட்ட மருத்துவ அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.அன்மை காலமாக எளிய மக்களுக்கு முறையான ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காமல் தவிக்கும் அவதிப்படும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமூக வலைத்தள வெளிச்சத்தின் மூலம் அவர்களுக்கு தாமதமாக கவனம் கிடைத்து உதவிகள் சென்று சேர்கின்றன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Ambulance, Uttar pradesh, Video gets viral

    அடுத்த செய்தி