ராஜினாமாவை ஏற்காத சபாநாயகர்.. உச்சநீதிமன்றத்தை நாடிய கர்நாடக எம்எல்ஏக்கள்...

சபாநாயகர் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் தாமதித்து வருவதாகக் கூறி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Web Desk | news18
Updated: July 10, 2019, 2:15 PM IST
ராஜினாமாவை ஏற்காத சபாநாயகர்.. உச்சநீதிமன்றத்தை நாடிய கர்நாடக எம்எல்ஏக்கள்...
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்
Web Desk | news18
Updated: July 10, 2019, 2:15 PM IST
சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 13 எம்.எல்.ஏக்களில் 8 பேரின் ராஜினாமா கடிதம் முறையாக இல்லை என கூறி அவற்றை ஏற்க சபாநாயார் ரமேஷ்குமார் மறுத்துவிட்டார். 5 எம்.எல்.ஏக்களை நேரில் சந்தித்து விளக்கமளிக்கும்படி சபாநாயகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், மும்பையில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக அமைச்சர் டி.கே சிவக்குமார் மற்றும் எம்.எல்.ஏ சிவலிங்கே கவுடா ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றனர்.


அங்கே அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரெனாய்சன்ஸ் சொகுசு விடுதிக்கு இருவரும் சென்றனர். அப்போது அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்க போலீசார் மறுத்திவிட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவக்குமார், அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் சில பிரச்னை இருப்பதாகவும் அவற்றை பேசி தீர்ப்போம் என்றும் கூறினார். மேலும், அரசியலில் ஒன்றாகவே பயணித்தோம், ஒன்றாகவே இருப்போம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

இதற்கிடையே, மும்பையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏக்களை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமார் ஆகியோர் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்நிலையத்தில் மனு அளித்தனர். குமாரசாமி மற்றும் சிவக்குமாரை சந்தித்து பேச விருப்பம் இல்லை என்றும் அவர்களால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Loading...

இதன்காரணமாக இருவரையும் சொகுசு விடுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். இதேபோன்று சொகுசு விடுதி நிர்வாகத்திடமும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரெனாய்ஸனஸ் விடுதியை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர் சிவக்குமாரை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து சொகுசு விடுதி முன்பு அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது.

இதனிடையே அமைச்சர் சிவக்குமாரின் பெயரில் விடுதியில் செய்யப்பட்டிருந்த முன்பதிவை ரத்து செய்வதாக விடுதி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் விடுதியின் முன்புறம் உள்ள கூட்டத்தை கட்டுப்படுத்துமாறு மும்பை மாநகர காவல் ஆணையருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தாமதிப்பதைக் கண்டித்து பாஜகவினர் பெங்களுருவில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

அக்கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சபாநாயகருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதற்கிடையே, சபாநாயகர் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் தாமதித்து வருவதாகக் கூறி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Also see...

First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...