அதிக கட்டணம் வசூலித்த 10 தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து!

10 தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து!

கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கட்டண நிர்ணயம் செய்துள்ளது. எனினும், தனியார் மருத்துவமனைகள் அதனை மீறி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.

 • Share this:
  தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிடம் சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், தெலுங்கானாவில் 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  தெலுங்கானா சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்களின் அடிப்படையில் 79 தனியார் மருத்துவனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

  இதனிடையே, ஐதராபத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பாதித்த தனது மகனுக்கு சிகிச்சை பார்த்து வந்த பெண், வென்டிலேட்டர் உதவியுடன் அவசரமாக மகனை அரசு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய காட்டாயம் ஏற்ப்பட்டது. ஏனெனில், தனியார் மருத்துவமனையில் நாளென்றுக்கு ரூ.1லட்சத்திற்கும் மேல் அவரிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது வீட்டை விற்றப் பின்னும் கூட அவரால் மருத்துவமனைக்கான கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அதனால், வேறு வழியில்லாமல் அரசு மருத்துவமனையில் மகனை அனுமதித்துள்ளதாக அந்த பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

  தெலுங்கானா அரசு கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டண நிர்ணயம் செய்துள்ளது. எனினும், தனியார் மருத்துவமனைகள் அதனை மீறி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.

  இதையடுத்து, தெலுங்கானா அரசு தரப்பில் அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை அடிப்படையில் அம்மாநிலத்தில் உள்ள 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தது. மேலும், மருத்துவமனைகள் சரிவர செயல்படாததும் தெரியவந்தது.

  Also read: கொரோனாவை குணப்படுத்தும் ஆந்திர ஆயுர்வேத மருத்துவரின் ‘அதிசய’ மூலிகை மருந்து!

  இதைத்தொடர்ந்து, அந்த 10 தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட உரிமத்தை தெலுங்கானா சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது.

  இந்த பட்டியலில் அலட்சிய போக்குடன் செயல்பட்ட காரணத்திற்காக இரண்டாவது முறையாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் உரிமத்தை விரிஞ்சி மருத்துவமனை இழந்துள்ளது.

  இந்த மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு இரண்டு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த வம்சி கிருஷ்ணா (35) என்ற நபர் கடந்த வியாழக்கிழமையன்று உயிரிழந்துள்ளார். இதையடுத்து, வம்சிக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவரை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

  இதுதொடர்பாக உயிரிழந்த வம்சியின் சகோதரி கூறும்போது, என் சகோதரனுக்கு லேசான நோய் பாதிப்பு இருந்த போது, மருத்துவர்கள் அவருக்கு அதிகளவிலான ஸ்டிராய்டு மருந்துகளை வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக நாங்கள் மருத்துவமனையை அனுகிய போது, அவர்கள் நாங்கள் கட்டிய பணத்தை திருப்பித் தருவதற்கு முன்வந்தனர். அப்படியென்றால், மருத்துவர்கள் தவாறான மருந்துகளை கொடுத்துள்ளார்களா? என்று அந்த பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.

  இதனிடையே, விரிஞ்சி மருத்துவமனையில் மருத்துவரை தாக்கியதாக 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: