ஹோம் /நியூஸ் /இந்தியா /

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள்

வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள்

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு 3 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில் நீதிபதி ரவீந்திர பட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

    உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் 5ல் 3 நீதிபதிகள் இடஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2019-ம் ஆண்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து, 103-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தது. ஆனால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும்முறை அரசியலமைப்பில் இல்லை என்று கூறி யூத் ஃபார் ஈகுவாலிட்டி என்ற அமைப்பு, அரசியல் கட்சிகள், தனிநபர்கள் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

    பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து, தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டது. யூத் ஃபார் ஈகுவாலிட்டி, தமிழ் நாடு, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள், திமுக, விசிக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தரப்பில் வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    இதன் வாதங்கள் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 3 நீதிபதிகள் 10% இடஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி ஆகிய 4 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில் நீதிபதி ரவீந்திர பட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பிற்கு தலைமை நீதிபதி யு.யு.லலித் ஆதரவு தெரிவித்தார்.

    எனவே உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Breaking News, Supreme court