ஹோம் /நியூஸ் /இந்தியா /

லக்னோவில் 47 பேருடன் கோவிலுக்குச் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி!

லக்னோவில் 47 பேருடன் கோவிலுக்குச் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி!

லக்னோவில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி

லக்னோவில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி

47 பேருடன் பயணம் செய்த டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 10 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Lucknow, India

  உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள இதௌஞ்சா என்ற பகுதியில் 47 பேருடன் கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த டிராக்டர் வாகனம் நிலைதடுமாறிக் கவிழ்ந்து சாலை ஓரத்தில் உள்ள குளத்தில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் டிராக்டரில் பயணம் செய்த 37 பேர் மீட்கப்பட்ட நிலையில் 10 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். 

  விபத்து குறித்து தகவல் கிடைத்த உடனே மாநில பேரிடர் மீட்புப் படை அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். குளத்தில் மூழ்கியவர்களில் 37 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும் 10 பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர்கள் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. புனித யாத்திரைக்குச் செல்லும் வழியில் நடந்த இந்த கோர விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த விபத்து குறித்து லக்னோ பகுதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் லக்ஷ்மி சிங் தெரிவிக்கையில், டிராக்டர் நிலைதடுமாறி குளத்தில் கவிழ்ந்து விபத்திக்குள்ளாகியுள்ளது. கோவிலுக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Accident, Uttar pradesh