ஹோம் /நியூஸ் /இந்தியா /

10% இடஒதுக்கீடு: அறிய வேண்டிய 10 முக்கியத் தகவல்கள்!

10% இடஒதுக்கீடு: அறிய வேண்டிய 10 முக்கியத் தகவல்கள்!

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

அனைத்து நீதிபதிகளும் பொருளாதார இடஒதுக்கீடு சரி என்றே கூறியுள்ளனர். அதில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் விடுபட்டதே தவறு என இருவர் தெரிவித்துள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் 4 விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டன
    உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு அடிப்படை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல - நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தீர்ப்பு
    பொதுப்பிரிவில் பொருளாதரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும். அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது - நீதிபதி பெலா திரிவேதி
    இடஒதுக்கீடு நீண்ட நாட்கள் நீடிக்க கூடாது, அது ஒரு தரப்பினருக்கு மட்டும் ஆதாயம் அளிக்க கூடியதாக மாறிவிடும். எனவே இந்த 10% இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் அமைப்பு சட்ட திருத்ததை வரவேற்கிறேன் - நீதிபதி எஸ்.பி.பர்திவாலா
    உயர்ஜாதிகளுக்கான 10% இடஒதுக்கீடு சமூகநீதியின் அடிநாதத்தை சிறுமைபடுத்தி உள்ளது - நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு
    50% உச்சவரம்பை மீறியுள்ளதையும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடும் அப்போது சட்டத்திற்கு எதிரானதாக கருதப்பட்டது. அந்த வழக்கில் கேட்கப்பட்ட கேள்விகள் இதற்கு பொருந்தும் - நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு
    பொருளாதார இடஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல. ஆனால் அதில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களை சேர்க்காது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது - நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு
    இந்த இடஒதுக்கீடு சமத்துவத்தின் ஆணி வேரை அசைத்து பார்த்துள்ளது - நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு
    நீதிபதி ரவீந்திர பட் இந்த சட்ட திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்கு தலைமை நீதிபதி யு.யு.லலித் ஆதரவு தெரிவித்தார்.
    அனைத்து நீதிபதிகளும் பொருளாதார இடஒதுக்கீடு சரி என்றே கூறியுள்ளனர். அதில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் விடுபட்டதே தவறு என இருவர் தெரிவித்துள்ளனர்
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Supreme court