பள்ளத்தில் கார் விழுந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

பள்ளத்தில் கார் விழுந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு
  • Share this:
ஆந்திரப்பிரதேசத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திரப்பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள காக்குமானு கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் காரில், அருகில் உள்ள எட்டுகூர் என்ற கிராமத்தில் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பள்ளத்தில் கவிழ்ந்தது.

அப்போது 10 முறை பல்டி அடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 10 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த குண்டூர் மாவட்ட போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் சடலங்களை கிராம மக்களின் உதவியுடன் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


First published: March 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading