ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 10 பேர் பரிதாப பலி - அதிர்ச்சி வீடியோ

விசாகப்பட்டினத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 10 பேர் பரிதாப பலி - அதிர்ச்சி வீடியோ
சரிந்து விழுந்த கிரேன்
  • Share this:
விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப் யார்டில் கிரேன் கவிழ்ந்து விழுந்து 10 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துறைமுகம் அருகே ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் சரக்கு பெட்டகங்களை கையாளும் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. கப்பல்களில் வரும் சரக்கு பெட்டகங்களை இறக்குவதற்கு அங்கு ராட்சத கிரேன்கள் உள்ளன. இன்று அங்கு இருக்கும் கிரேன்களை ஊழியர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சுமார் 60 அடி உயரமுள்ள ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து விழுந்தது. சரிந்து விழுந்த கிரேனுக்கு அடியில் சுமார் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் 10 பேர் உடல் நசுங்கி பலியாகிவிட்டனர். ஒருவர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து பற்றிய தகவல் அறிந்த துறைமுக தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் ஆகியோர் விரைந்து சென்று கிரேனுக்கு அடியில் சிக்கி கொண்டுள்ள அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading