Home /News /national /

யாத்திரை சென்ற வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து..10 பேர் பலி,19 பேருக்கு சிகிச்சை

யாத்திரை சென்ற வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து..10 பேர் பலி,19 பேருக்கு சிகிச்சை

வாகனத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 10 யாத்திரிகர்கள் பலி

வாகனத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 10 யாத்திரிகர்கள் பலி

சம்பவ இடத்தில் இருந்து வாகனத்தின் டிரைவர் தப்பியோடிய நிலையில், அவரை விரைந்து பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

    மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கூச் பெஹர்பகுதியில் வேன் ஒன்றில் மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 19க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேற்கு வங்க மாநிலம் சித்தால்குச்சி என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு குழு கன்வாரியா புனித யாத்திரை மேற்கொண்டனர். சுமார் 30க்கும் மேற்பட்டோர் வேன் ஒன்று எடுத்து கங்கை நதியை வழிபட  யாத்திரை சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும், கூச் பெஹர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது வாகனத்தில் திடீரென்று மின்சாரம் பாய்ந்து   விபத்து ஏற்பட்டுள்ளது.பயணம் செய்த யாத்திரிகர்கள் துடித்துக்கொண்டு கீழே விழுந்த நிலையில், வாகனத்தின் ஓட்டுநர் வண்டியை ஓரம்கட்டி அருகே இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.


    அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆம்புல்ன்ஸ்சுக்கு தகவல் அளித்து வாகனத்தில் பயணம் செய்தவர்களை சங்க்ராபந்தா அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

    இதையும் படிங்க: யூடியூப் பார்த்து மது தயாரித்த 12 வயது சிறுவன்.. குடித்த சக நண்பனுக்கு வாந்தி, மயக்கம்

    மருத்துவமனைக்கு வரும் போது 10 பேர் உயிரிழந்து காணப்பட்டதாகவும், மீதம் 19 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மேற்கு வங்க காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த வரும் காவல்துறை வாகனத்தில் உள்ள டிஜே சவுன்ட் சிஸ்டம் வயரிங்கில் கோளாறு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என யூகித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து வாகனத்தின் டிரைவர் தப்பியோடிய நிலையில், அவரை விரைந்து பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Accident, Electricity

    அடுத்த செய்தி