கோவிட்-19: செப்டம்பருக்குள் மாதம் 10 கோடி தடுப்பூசி என்ற உற்பத்தி திறனை எட்ட நடவடிக்கை!

கோப்புப் படம்

3 பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கோவாக்ஸின் தடுப்பூசிகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், சில மாநிலங்களில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உள்நாட்டு கோவிட் -19 தடுப்பூசிகளின் (கோவாக்சின்) உற்பத்தி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாதத்திற்கு கிட்டத்தட்ட 10 கோடி அளவை எட்டும் என்று பயோடெக்னாலஜி துறை தெரிவித்துள்ளது. இதற்காக 3 பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கோவாக்ஸின் தடுப்பூசிகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பையை சேர்ந்த ஹாஃப்கின் பயோஃபார்மாசூட்டிகல் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் இம்யூனோலாஜிகல்ஸ் அண்ட் பயோலாஜிக்கல்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பணியில் ஈடுபட உள்ளன. தனது "ஆத்மநிர்பார் பாரத் 3.0 மிஷன் கோவிட் சூரக்ஷா"(Atmanirbhar Bharat 3.0 Mission COVID Suraksha) திட்டத்தின் கீழ் 2 முக்கிய தடுப்பூசி உற்பத்தியாளர்களின் தளங்களை பார்வையிட்ட பின், தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பது குறித்த தகவல்களை பயோடெக்னாலஜி துறை அறிவித்துள்ளது.

மேலும் இந்த காலகட்டத்தில், தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் விரிவான மதிப்புரைகள் மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத் பாரத் பயோடெக் லிமிடெட் மற்றும் பிற பொதுத்துறை உற்பத்தியாளர்களின் திறன்கள் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்..? அவசியமும்..முக்கியத்துவமும்..!

இது தவிர பெங்களூருவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு சுமார் 65 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசியின் தற்போதைய உற்பத்தி திறன் மே-ஜூன் மாதத்திற்குள் இரட்டிப்பாகும். பின் வரும் ஜூலை - ஆகஸ்ட் 2021-க்குள் கிட்டத்தட்ட உற்பத்தி அளவு 6 முதல் 7 மடங்கு வரை அதிகரிக்கும். அதாவது இந்த மாதம் 1 கோடி தடுப்பூசி என்ற அளவில் இருக்கும் உற்பத்தி திறனை, வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 6-7 கோடி தடுப்பூசி என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாக அறிக்கையில் பயோடெக்னாலஜி துறை குறிப்பிட்டுள்ளது.

ஹாஃப்கின் நிறுவனத்திற்கும் மத்திய அரசு ரூ.65 கோடி நிதி அளிக்க உள்ளது. இந்த நிறுவனம் தடுப்பு மருந்து உற்பத்தியை துவங்கி மாதத்திற்கு 20 மில்லியன் என்ற உற்பத்தி அளவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்திற்குள் மாதத்திற்கு 10-15 மில்லியன் டோஸ் வழங்கும் வகையில் இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் இம்யூனோலாஜிக்கல்ஸ் அண்ட் பயோலாஜிக்கல்ஸ் லிமிடெட் உள்ளிட்ட பொத்துறை நிறுவனங்களும் மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் தயாராகி வருகின்றன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: