நகராட்சி பள்ளியில் வழங்கப்பட்ட மாத்திரையை விழுங்கிய மாணவி மரணம்

news18
Updated: August 10, 2018, 7:56 PM IST
நகராட்சி  பள்ளியில் வழங்கப்பட்ட மாத்திரையை விழுங்கிய மாணவி மரணம்
கோப்புப்படம்
news18
Updated: August 10, 2018, 7:56 PM IST
மும்பை பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் வழங்கப்பட்ட இரும்புச் சத்து மாத்திரையை விழுங்கிய 12 வயது மாணவி உயிரிழந்தார். மேலும் 160 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

மும்பை பைங்கன்வாடி பகுதியில் உள்ள, பிரிஹான் நகராட்சிக்கு சொந்தமான நகராட்சி உருது பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ரத்த சோகையை சரி செய்வதற்காகவும், வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்வதற்காகவும் இரும்புச் சத்து மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டது. இதனை உட்கொண்ட 12 வயது மாணவி ஒருவர் வியாழக்கிழமை இரவு ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.

தேசிய திட்டத்தின் படி விநியோகம் செய்யப்பட்ட இந்த மாத்திரைகளை உட்கொண்ட மற்ற மாணவர்களுக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டவுடன், அவர்களுடைய பெற்றோர்கள் மாணவர்களை நகராட்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை பரிசோதித்த குழந்தை நல மருத்துவர்கள் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியதால், அனைவரும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து பேசிய மும்பை மாநகராட்சியின் சுகாதரத் துறை அதிகாரி பத்மஜா கேஸ்கர் “மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து மாத்திரைகளும் முறையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே விநியோகம் செய்யப்பட்டன. மாணவியின் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரியவரும்” என தெரிவித்தார். மேலும் மாணவியின் இறப்புக்குக் காரணம் அவருக்கு இருந்த காச நோயாகக் கூட இருக்கலாம் எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...