முகப்பு /செய்தி /இந்தியா / ஜம்மு-காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதல்... ஒருவர் உயிரிழப்பு...!

ஜம்மு-காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதல்... ஒருவர் உயிரிழப்பு...!

குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் காவல் துறையினர் சோதனையிடுகின்றனர்

குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் காவல் துறையினர் சோதனையிடுகின்றனர்

கடந்த மாதம் 28-ஆம் தேதி சோபூர் பகுதியில் இதேபோல் கையெறி குண்டு மூலம் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் 35 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜம்மு-காஷ்மீரின் மவுலானா ஆசாத் சாலை மார்கெட் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று மதியம் 1:30 மணிக்கு கையெறி குண்டு மூலம் நிகழ்ந்த இந்த தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 28-ஆம் தேதி சோபூர் பகுதியில் இதேபோல் கையெறி குண்டு மூலம் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Also see...

First published:

Tags: Jammu and Kashmir