நேபாள போலீஸார் துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் உயிரிழப்பு - எல்லையில் இருநாட்டு படைகள் குவிப்பு

நேபாள போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேபாள போலீஸார் துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் உயிரிழப்பு - எல்லையில் இருநாட்டு படைகள் குவிப்பு
உயிரிழந்த நபர்
  • Share this:
பீகார் மாநிலத்தின் எல்லையை நேபாளம் பகிர்ந்து கொள்கிறது. இந்த நிலையில், சர்லாகி மாவட்ட எல்லை வழியாக அத்துமீறி நேபாளுக்குள் நுழைந்ததாக இந்தியர்கள் மீது நேபாள் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து, இந்திய - நேபாள் எல்லையில் உள்ள 15 சோதனைச் சாவடிகளில் (Nepal side) நேபாள ஆயுதப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய எல்லைப் பகுதியில் கூடுதல் பாதுகாப்பிற்காக ஷாஷத்ர சீமா பால் வீரர்களை இந்திய ராணுவம் குவித்துள்ளது. இதனால் இரு தரப்பு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது


Also See: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை... எவை...? - மாவட்டம் வாரியாக முழு பட்டியல்First published: June 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading