Home /News /national /

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 200-ல் ஒருவருக்கு ஆக்சிஜன் உதவி தேவை... ஆய்வில் தகவல்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 200-ல் ஒருவருக்கு ஆக்சிஜன் உதவி தேவை... ஆய்வில் தகவல்

Corona Positive

Corona Positive

சராசரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் காலம் 3 நாட்கள் என தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 200 பேரில் ஒருவருக்கு மட்டுமே ஆக்சிஜன் உதவி தேவை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

    Association of Healthcare Providers India (AHPI)என்ற மருத்துவ அமைப்பினர் கொரோனா, ஒமைக்ரான் பரவல் மற்றும் சிகிச்சைக்கு தேவைப்படும் உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். 2,500 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் 8 ஆயிரம் சிறிய மருத்துவமனைகள் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்தியா முழுக்க இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : அரசு விழாவில் முதல்வர் முன்னிலையில் மோதலில் ஈடுபட்ட அமைச்சர்கள்... பரபரப்பு சம்பவம்

    இதில் பொதுமக்கள் நிம்மதி அடைய வேண்டிய விஷயம் என்னவென்றால், 200 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால், அவர்களில் ஒருவருக்கு மட்டுமே ஆக்சிஜன் உதவி (Oxygen Support) தேவைப்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இதனை இரண்டாவது அலையுடன் ஒப்பிடும்போது, பாதிப்பின் தீவிரம் மிக மிக குறைவு என்று புரிந்து கொள்ளலாம்.

    இதையும் படிங்க : நாட்டையே உலுக்கிய Bulli Bai செயலி விவகாரத்தில் இஞ்சினியரிங் மாணவர் கைது

    சராசரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் காலம் 3 நாட்கள் என தெரியவந்துள்ளது.

    ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநிலங்கள்தான் கொரோனாவால் மிக அதிகம் பாதிக்கப்பட்டவை. இங்கு தற்போத 90 சதவீத படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. மகாராஷ்டிராவில் 9 முதல் 10 சதவீத படுக்கைகளில் மட்டுமே பாதிக்கப்பட்டோர் உள்ளனர். டெல்லியில் 10 சதவீதத்திற்கும் குறைவானோருக்குத்தான் படுக்கை வசதி தேவைப்படுகிறது.

    கொரோனா இரண்டாம் அலையின்போது இந்தியா முழுமையும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் தொற்று ஏற்பட்ட பலர் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டது. இதேபோன்று, படுக்கை வசதி இல்லாமல் ஏராளமானோர் பரிதவித்தனர்.

    இதையும் படிங்க : அதிகரிக்கும் கொரோனா - பஞ்சாப்பில் 15ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!

    அதுபோன்ற மிக மோசமான நிலைமை தற்போது இல்லை என்பதை புள்ளி விபரங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Covid-19, Omicron

    அடுத்த செய்தி