• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஏழைகளுக்கு 2 ஆண்டுகளில் மேலும் 1 கோடி இலவச சமையல் எரிவாயுஇணைப்புகள்: மத்திய அரசு உறுதி

ஏழைகளுக்கு 2 ஆண்டுகளில் மேலும் 1 கோடி இலவச சமையல் எரிவாயுஇணைப்புகள்: மத்திய அரசு உறுதி

மாதிரிப்படம்.

மாதிரிப்படம்.

பயனாளர்கள் சவுகரியம் கருதி ஸ்டவ் மற்றும் தீர்ந்தவுடன் கேஸ் மறு ஃபில் செய்வதற்கான தொகையை தவணைகளில் செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அடுத்தடுத்த ரீஃபில்களுக்கான செலவுகளை பயனாளர்களே சுமக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    பெண்கள் ஆரோக்கியத்துக்கு உதவுவதாகவும் வீட்டிலிருந்து எழும் சுற்றுச்சூழல் நாசினியைக் குறைக்கவும் பிரதமர் மோடியினால் கொண்டு வரப்பட்ட இலவச எல்.பி.ஜி இணைப்புத் திட்டம் உலக அளவில் பாராட்டப்பட்டதாகும்.

    அடுத்த 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 1 கோடி இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. நாட்டில் 100% சுத்தமான எரிபொருள் என்ற லட்சியம் கூடிய விரைவில் நிகழும் என்று மத்திய எண்ணெய் அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார்.

    எண்ணெய் செயலர் தருண் கபூர் இது தொடர்பாகக் கூறும்போது, குறைந்த பட்ச அடையாள ஆவணங்கள் இருந்தால் போதும் இந்த இலவச எல்.பி.ஜி இணைப்பு கிடைத்து விடும் என்கிறார்.

    முதலில் ஏழைகளுக்கு சிலிண்டர் இணைப்பு அளித்த மத்திய அரசு மீது மறுமுறை அவர்கள் வாங்க முடியாமல் தத்தளித்ததாக விமர்சனங்கள் எழுந்தன, ஆனால் இம்முறை 3 டீலர்களிடமிருந்து அவர்கள் சிலிண்டர் தீர்ந்தவுடன் புதிய சிலிண்டர்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்கிறார் எண்ணெய் செயலர். முன்பு ஒரேயொரு டீலர் மட்டுமே இதைச் செய்து வந்ததால் தொடர்ச்சியாக இலவச சிலிண்டர்கள் அளிக்கப்படவில்லை, காரணம் சிலிண்டர்கள் தட்டுப்பாடு இருந்ததே.

    4 ஆண்டுகளில் சாதனை அளவான 8 கோடி இலவச சிலிண்டர்கள் ஏழைகள் வீடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டில் எல்.பி.ஜி பயனாளர்கள் எண்ணிக்கை 29 கோடியாக அதிகரித்துள்ளது என்கிறார் எண்ணெய் செயலர் தருண் கபூர்.

    “எங்கள் இலக்கு என்னவெனில் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 1 கோடி இலவச இணைப்புகள் இலக்கை எட்டுவதாகும். முன்பு இலவச இணைப்புகள் வழங்கிய போது விடுபட்டவர்கள் எண்ணிக்கையை நாங்கள் கணக்கிட்டோம். இது ஒரு கோடியாக உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் வெற்றியினால் தற்போது இந்தியாவில் எல்பிஜி இல்லாதிருப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 29 கோடி இணைப்புகள் இப்போது நாட்டில் உள்ளன. இன்னும் ஒரு கோடி பேருக்குக் கொடுத்து விட்டால் 100% எல்பிஜி ஊடுருவல் நடந்து விடும்” என்றார்.

    சமையல் எரிவாயுவின் மூலம் வெளியாகும் கரியமில வாயுவின் அளவு மற்ற மரபார்ந்த எரிபொருட்களிலிருந்து வெளியாகும் கார்பண்டையாக்சைடை விட 50% குறைவு. அதனால்தான் மோடியின் இந்தத் திட்டத்தை 2018-ல் உலகச் சுகாதார அமைப்பு பாராட்டியது.

    உஜ்வாலா திட்டம் தவிர எல்.பி.ஜி இணைப்புகளைப் பெறுவதற்கான விதிமுறைகளை தளர்த்தியுள்ளோம் என்கிறது மத்திய அரசு.

    ஒரு குடும்பம் தற்காலிகமாக ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கு குடிபெயர்ந்தாலும் உடனடியாக எல்.பி.ஜி இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆவணங்களிலும் எளிமையாக நடைமுறைகளையே உருவாக்கியுள்ளோம் என்கிறார் தருண் கபூர்.

    இத்திட்டத்தின் கீழ் பயனடைவோர் தங்களுக்கான கேஸ் அடுப்பை வாங்கிக் கொள்ள வேண்டும். பயனாளர்கள் சவுகரியம் கருதி ஸ்டவ் மற்றும் தீர்ந்தவுடன் கேஸ் மறு ஃபில் செய்வதற்கான தொகையை தவணைகளில் செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அடுத்தடுத்த ரீஃபில்களுக்கான செலவுகளை பயனாளர்களே சுமக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்திட்டத்தின் நோக்கம் குறித்து விமர்சனம் செய்யும் இந்தத் துறை சார்ந்த தனித்த ஆர்வலர்கள் கூறுவதென்னவெனில், பெட்ரோல், கேஸ் தனியார் மயமாகும் போது போதிய சந்தை இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுவதாக ஒரு விமர்சனமும் இருந்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: