இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் பரவல் கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ஓமைக்ரான் பரவல் உயரத் தொடங்கியது. தற்போது வரை 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியிருக்கிறது.
நேற்று ஒரே நாளில் 616 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் தற்போது 3,623 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,009 பேரும், டெல்லியல் 513 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Also read: கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்.. ஊரடங்கு தேவை இல்லை: WHO தலைமை விஞ்ஞானி
இதனிடையே கடந்த சில நாட்களாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் 3வது அலை உச்சமடையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,59,632 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 3,55,28,004 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 327 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 4,83,790 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 40,863 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,44,53,603 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,90,611 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்தோர் விகிதம் 96.98% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.36% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.66% ஆக அதிகரித்துள்ளது.
மேலும் படிங்க: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எப்போது குறையும்? ஆய்வு தகவல்கள் வெளியீடு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.