Home /News /national /

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை நெருங்கியது.. 285 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை நெருங்கியது.. 285 பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,41,986 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,41,986 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,41,986 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை நெருங்கியுள்ளது.

    கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் பரவல் கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ஓமைக்ரான் பரவல் உயரத் தொடங்கியது. தற்போது வரை 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியிருக்கிறது.

    நேற்று ஒரே நாளில் 64 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் தற்போது3,007 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 876 பேரும், டெல்லியல் 513 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் படிங்க: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எப்போது குறையும்? ஆய்வு தகவல்கள் வெளியீடு

    இதனிடையே கடந்த சில நாட்களாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் 3வது அலை பரவல் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,41,986 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 3,53,68,372 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று 21% கூடுதலாகும்.

    கடந்த 24 மணி நேரத்தில் 285 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 4,83,463 ஆக உயர்ந்துள்ளது.

    இதையும் படிங்க: இத்தாலியில் இருந்து ஒரே விமானத்தில் வந்த 173 பேருக்கு கொரோனா தொற்று
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19, Omicron

    அடுத்த செய்தி