ஊரடங்கு காலத்தில் 1.04 கோடி பேர் சொந்த மாநிலம் திரும்பினர்; உயிரிழந்தோர் விவரங்கள் இல்லை - மத்திய அரசு பதில்

ஊரடங்கு காலத்தில் சொந்த மாநிலம் திரும்பியவர்கள் 1.04 கோடி பேர் என்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இல்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் 1.04 கோடி பேர் சொந்த மாநிலம் திரும்பினர்; உயிரிழந்தோர் விவரங்கள் இல்லை - மத்திய அரசு பதில்
புலம்பெயர் தொழிலாளர்கள் (கோப்புப்படம்)
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 8:12 PM IST
  • Share this:
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தவுள்ளதாக மார்ச் 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அடுத்த சில நாட்களில் வேலைவாய்ப்பு, வருமானம் இழந்த பல தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கினர். உரிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் நடந்தே ஊர் போய் சேர்ந்தர்கள். சிலர் போகும் வழியிலேயே இறந்தும் போனார்கள்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு காலத்தில் மட்டும் தாங்கள் வேலை பார்த்த மாநிலத்திருந்து சொந்த ஊர் திரும்பியவர்களின் எண்ணிக்கை 1.04 கோடி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக எம்.பி. நவாஸ்கனி மற்றும் மஹாராஷ்டிரா மாநில எம்.பி. சுரேஷ் நாராயன் ஆகியோர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.Also read: நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து கருத்து சொல்ல உரிமை உள்ளது - சூர்யாவுக்கு ஆதரவாக பெண் வழக்கறிஞர்கள் சங்கம் அறிக்கை


அதில், ஊரடங்கு காலத்தில் மட்டும் வேலை பார்த்த மாநிலங்களிலிருந்து சொந்த மாநிலங்களுக்கு 1.04 கோடி பேர் திரும்பினர். இதில் தமிழகத்திற்கு 72,145 பேரும் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு 32,49,638 பேரும் பிஹாருக்கு 15 லட்சம் பேரும் ராஜஸ்தானுக்கு 13 லட்சம் பேரும் மத்திய பிரதேசத்திற்கு 7.53 லட்சம் பேரும் திரும்பியதாகத் தெரிவித்தர்.

மேலும், சொந்த ஊருக்குத் திரும்பும் வழியில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை, அதன் மாநில வாரியான விவரங்கள், இவர்களுள் வேலைவாய்ப்பை இழந்தவர்களின் விவரங்கள் இத்துறையிடம் இல்லை என்றும், ஊரடங்கு காலத்தில் இந்திய ரயில்வே துறையால் 4,611 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், அதன் மூலம் 63.07 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading