ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு கண்டக்டரிடம் போதை இளைஞர் ரகளை.. வீடியோ

போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு கண்டக்டரிடம் போதை இளைஞர் ரகளை.. வீடியோ

குடிபோதையில் கண்டக்டரிடம் சண்டை போட்டும் நபர்

குடிபோதையில் கண்டக்டரிடம் சண்டை போட்டும் நபர்

Rasipuram | ராசிபுரத்தில் குடிபோதையில் பஸ் கண்டக்டரிடம் போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு தகராறில் ஈடுப்பட்டவர் கைது...

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Rasipuram, India

  ராசிபுரத்தில் அரசு பேருந்து செல்லாத இடத்திற்கு பயண சீட்டு கேட்டு நடத்துனரிடம் கைகலப்பில் ஈடுபட்ட மது பிரியர். ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தானது காரவள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் மது பிரியர் ஒருவர் பேருந்து செல்லாத இடத்திற்கு நடத்துனரிடம் பயண சீட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே மது பிரியர்  கண்மூடித்தனமாக நடத்துனரை தாக்கியுள்ளார்.

  பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுனரிடம் கூறியதையடுத்து கீழே இறங்கிய நடத்துனர் மற்றும் மதுபிரியர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  Also see... நடிகையின் செல்போன் எண்ணைக்கேட்டு கேமராமேனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு சம்மன்...

   பின்னர் அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மது பிரியரை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Bus, Rasipuram, Ticket booking