ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

ஆன்லைன் ரம்மியால் லட்சங்களை இழந்த இளைஞர்... Bye Bye Miss U ரம்மி என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை...

ஆன்லைன் ரம்மியால் லட்சங்களை இழந்த இளைஞர்... Bye Bye Miss U ரம்மி என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை...

நாமக்கல் - ரம்மி விளையாடி தற்கொலை

நாமக்கல் - ரம்மி விளையாடி தற்கொலை

Online Rummy | ராசிபுரம் அடுத்த பட்டணம் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் இழந்த பட்டதாரி இளைஞர் Bye Bye Miss U ரம்மி என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rasipuram, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் B.COM படித்து விட்டு வெளிநாட்டில் வேலைக்கு  செல்வதற்காக முயற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த சுரேஷ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது.

நாளடைவில் சுரேஷ் அதற்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் ஆன்லைன் ரம்மியில் 5 லட்சத்திற்கும் மேல் இழந்ததாக தெரிகிறது. மனமுடைந்த சுரேஷ் 'வெளிநாடு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் உறவினர்களிடம் நண்பர்களிடம் வாங்கிய பணம் முழுவதையும் ரம்மியில் இழந்து விட்டேன். மேலும் ஆன்லைன் ரம்மியில்இருந்து மீளமுடியவில்லை’ எனவும்  Bye Bye Miss U ரம்மி  எனவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சுரேஷின் தந்தை விஸ்வநாதன் இது குறித்து கூறுகையில், தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் உயிரிழப்பு சம்பவம் நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது என்னுடைய மகனும் ஆன்லைன் ரம்மியால்  பணத்தை இழந்து மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

Also see...கொடைக்கான‌லில் 3 ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ பெய்யும் கனமழை... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... 

மேலும் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

செய்தியாளர்: சுரேஷ், ராசிபுரம்

First published:

Tags: Commit suicide, Online rummy, Rasipuram