ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை கால் செய்து வரவைத்த கணவரை புரட்டி எடுத்த மனைவி

குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை கால் செய்து வரவைத்த கணவரை புரட்டி எடுத்த மனைவி

கணவனை வெளுத்து வாங்கிய மனைவி

கணவனை வெளுத்து வாங்கிய மனைவி

Wife Attacked Drunken Husband : நாமக்கல்லில் குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை அழைத்த நபரை அவரது மனைவி வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் சிட்கோ காலனியை சேர்ந்தவர் முருகேசன்(55), இவர் குடிபோதையில் இன்று “சாலை விபத்தில் அடிபட்டு விட்டேன்” என்று 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெறிவித்துள்ளார். அதன்படி நாமக்கல் -  திருச்சி சாலையில் இருந்து விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் குடிபோதையில் இருப்பதும், எந்த வாகனமும் இடித்த காயமும் இல்லை என்றும் அறிந்தனர்.

இதற்கிடையில், அவருடைய மனைவி அங்கு வந்து “ஏன் குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை அழைத்தாய். அவர்கள் உயிர் காக்கும் சேவகர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு சேவை செய்ய செல்லும் நேரத்தை நீ ஏன் குடி போதையில் வீனடிக்கிறாய்” என கணவனுக்கு தர்ம அடி கொடுத்து வெளுத்து வாங்கினார். மனைவி செய்த தரிசனத்தால் போதையும் இறங்கி தலை தெறிக்க முருகேசன் ஓடினார் .

மேலும், அங்கிருந்தவர்கள் “போலீஸ் வருகிறார்கள்” எனக்கூறியதையடுத்து முருகேசன் இருசக்கர வாகனத்தில் ஏறி வேகமாக அவ்விடத்தை விட்டு கிளம்பினார். குடிபோதையில் ஆம்புலன்ஸ் அழைத்து தொல்லை கொடுத்த கணவனை வெளுத்து வாங்கிய மனைவியால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் : ரவிச்சந்திரன்  ராஜகோபால் - நாமக்கல்

First published:

Tags: Crime News, Local News, Namakkal