ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

தனித்தனி கள்ளத்தொடர்பில் கணவன் - மனைவி.. பிரச்னை வராமல் ஒப்பந்தம்.. இன்சூரன்ஸ் பணத்தால் பகீர் படுகொலை!

தனித்தனி கள்ளத்தொடர்பில் கணவன் - மனைவி.. பிரச்னை வராமல் ஒப்பந்தம்.. இன்சூரன்ஸ் பணத்தால் பகீர் படுகொலை!

விமல் குமார் - சரண்யா

விமல் குமார் - சரண்யா

மருத்துவமனையில் தேவாவின் உடல் இருந்தபோது அவரது மனைவி சரண்யா கதறி அழுது மயக்கம் வருவது போல் நடித்து நாடகம் ஆடி இருந்தார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Namakkal, India

கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்ததால், மனைவியே கூலிப்படையை வைத்து கணவரை படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கால் நத்தம் பகுதியை சேர்ந்தவர் தேவா (எ) தேவராஜ் (வயது 34). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், கடந்த 19ஆம் தேதி திருச்செங்கோடு அப்பூர்பாளையத்திலிருந்து கைலாச பாளையம் செல்லும் ரோட்டில் ஜெகதாம்பாள் நகர் அருகில் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இவரின் கழுத்தறுக்கப்பட்டு, இரண்டிற்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்திய காயங்களுடன் கடந்த 19ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணிக்கு ஜெகதாம்பாள் நகர் அருகில் விழுந்துகிடந்தார். இந்த சம்பவம் குறித்து ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இதையும் படிக்க :  ஒருதலைக்காதல்.. சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்த இளைஞர்.!

விசாரணையில் இறந்து போன தேவராஜுக்கு சரண்யா (வயது 30) என்ற மனைவியும், கிருபாகரன் என்ற மகனும், கிரிப்டோ என்ற மகளும் உள்ளனர்.  கோழிக்காலம் பகுதியில் பெற்றோருடன் ஒன்றாக இருந்து வந்த நிலையில் தொழில் தொடர்பாக இவரோடு பழகி வந்த சங்ககிரி பகுதியைச் சேர்ந்த விமல் குமார் என்ற வாலிபர் தேவராஜன் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த விமல்குமாருகும் சரண்யாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சரண்யாவை அக்கா என விமல் குமார் அழைத்து வந்ததால் எந்த சந்தேகமும் ஏற்படாத நிலையில் இவர்களது கள்ளத்தொடர்பு அவர்கள் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஏற்பட்ட தகராறு காரணமாக தேவராஜன் மனைவியுடன் அதேபகுதியில் தனி குடித்தனம் சென்றார். அந்த பகுதிக்கு குடியேறிய நிலையில், அங்கு ஒரு பெண்ணுடன் தேவாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சரண்யா தட்டி கேட்டபோது உன்னை நான் கண்டு கொள்ளவில்லை. என்னை நீ கண்டுகொள்ள வேண்டாம்., என தேவாவும் சரண்யாவும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சுதந்திரம் கிடைத்தது போல் உணர்ந்த விமல் குமார் தேவாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். இது பிடிக்காத தேவா, விமல் குமாரை கண்டித்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து கணவன் மனைவி இடையே சண்டை இருந்து வந்துள்ளது. இதனால் விமல் குமார் சரண்யா இருவரும் திட்டம் திட்டி தேவாவை தீர்த்த கட்ட முடிவு செய்துள்ளனர். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேவா பெயரில் 10 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர்.

இவர்களுக்குள் தகராறு முற்றவே கடந்த ஆண்டு ராசிபுரம் பகுதியில் ஒரு கூலிப்படையை நியமித்து கொலை சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டனர். கூலிப்படையை சேர்ந்தவர் வேறொரு வழக்கில் கைதானதால் அப்போது அந்த சம்பவம் நடக்காமல் போனது. இந்த நிலையில் தொடர்ந்து தேவா சரண்யாவிடம் சண்டையிட்டு வந்ததால் விமல் குமார் தனக்கு தெரிந்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் பேசி கூலிப்படையை நியமிக்க உதவிகேட்டுள்ளார். மேலும் அவரிடம் அடுத்த ஆண்டு இன்சூரன்ஸ் பணம் மெச்சூரிட்டி ஆகிவிடும். அதில் சம்பவத்துக்கு உண்டான பணத்தை தந்து விடுகிறேன் எனக்கூறி பேரம் பேசியுள்ளார்.

இவர்கள் திட்டமிட்டபடி, வேலை இருப்பதாக கூறி விமல்குமார் தேவராஜனை அப்பூர்பாளையத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த தேவராஜை கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கழுத்தை அறுத்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்தது தெரியவந்தது.

குற்றவாளிகள் குறித்து விசாரணை செய்யும்போது சரண்யாவின் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்ததில், அவர் விமல்குமாருடன் அடிக்கடி பேசி வந்திருப்பதும், தேவாவின்போனை ஆய்வு செய்தபோது அவர் ஒரு பெண்ணுடன் தொடர்ந்து பேசி வந்திருப்பதும் தெரிய வந்தது. இதனை அடிப்படையாக வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் தேவாவின் மனைவி சரண்யா தனது கள்ளக்காதலன் விமல் குமார் உடன் சேர்ந்து கூலிப்படை வைத்து தேவாவை கொலை செய்தது தெரியவந்திருக்கிறது

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார்? எத்தனை பேர் தொடர்பில் இருக்கிறார்கள்? கூலிப்படையை சேர்ந்தவர்கள் யார்? என்பது குறித்து ஊரக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் தேவாவின் உடல் இருந்தபோது அவரது மனைவி சரண்யா கதறி அழுது மயக்கம் வருவது போல் நடித்து நாடகம் ஆடி உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

செய்தியாளர் : ரவிச்சந்திரன் ராஜகோபால் (நாமக்கல்)

First published:

Tags: Crime News, Namakkal, Wife plot to kill husband