Home /News /namakkal /

நாமக்கல்லில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு

நாமக்கல்லில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு

பாஸ்கர் வீட்டில் ரெய்டு

பாஸ்கர் வீட்டில் ரெய்டு

நாமக்கல்லில் அதிமுக பிரமுகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் வீடு மற்றும் அலுவலகம், உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் வீடு, மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கே பரபரபப்பு நிலவி வருகிறது.

    இந்த சோதனையானது நாமக்கல்லில் உள்ள அவரது வீடு, உறவினர்கள் வீடு, அலுவலகம் மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்கள் உள்ளிட்ட மொத்தம் 26 இடங்களில்  (நாமக்கல்-24, மதுரை-1, திருப்பூர்-1) நடைபெற்று வருகிறது.

    நாமக்கல்லில், பாஸ்கரின் தங்கை வீடு, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேகர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களின் வீடுகளிலும் இந்த சோதணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சோதனை நடைபெற்று வரும் பாஸ்கர் வீட்டில் பாதுகாப்பு கருதி இருபதுக்கு மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் நகர பொறுப்பாளர்கள் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் அவர் வீட்டின் முன் குழுமியுள்ளனர். இந்நிலையில், வீட்டுக்கு செல்லும் பாதையில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் யாரையும் உள்ளே விடாமல் தடுத்து வருகின்றன. இதனால் அப்குதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    நாமக்கல் சட்டசபை தொகுதியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தவர் பாஸ்கர். இவர் நகர அதிமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். பாஸ்கருக்கு சொந்தமான வீடு மோகனூர் ரோட்டில், உள்ள கே.கே.நகரில் உள்ளது. இவருக்கு உமா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். பாஸ்கர் தற்போது லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வருகிறார்.

    Must Read : தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் - கள்ளக்குறிச்சி மாணவி பெற்றோரை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல்

    பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாகவும், இந்த வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகம் எனவும், இதையொட்டி நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர் - ரவிக்குமார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Directorate of Vigilance and Anti-Corruption, DVAC, Namakkal

    அடுத்த செய்தி