ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000.. நாமக்கல்லில் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம்!

பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000.. நாமக்கல்லில் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம்!

நாமக்கல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்

நாமக்கல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்

Namakkal pongal gift | பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொங்கல் பரிசு தொகை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Namakkal

நாமக்கல் மாவட்டத்தில் 5,43,076 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணி இன்று தொடங்கியது.

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசாக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ரூ.1,000 மற்றும் ஒரு முழுக் கரும்பும் சேர்த்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் 865 நியாய விலை கடைகளில் 5 லட்சத்தி 42 ஆயிரத்து 403 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், 673 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 5 லட்சத்து 43 ஆயிரத்து 076 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு நாள் ஒன்றுக்கு 250 குடும்ப அட்டைதாரர்கள் விகிதம், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி மற்றும் நேரம் தொடர்பான டோக்கன் இன்று முதல் 8-ந்தேதி வரை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வழங்கும் பணி தொடங்கியது.

பின்னர் 9-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் எனவும் பொங்கல் பரிசு டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள நாள் அன்று, குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலை கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், தெரிவித்து உள்ளார்.

செய்தியாளர்: பிரதாப், நாமக்கல் 

First published:

Tags: Local News, Namakkal, Pongal 2023, Pongal festival, Pongal Gift