முகப்பு /செய்தி /நாமக்கல் / சைக்கிளில் சென்று உணவு டெலிவரி.. கிடைக்கும் நேரத்தில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி.. ராசிபுரம் இளைஞரின் தன்னம்பிக்கை!

சைக்கிளில் சென்று உணவு டெலிவரி.. கிடைக்கும் நேரத்தில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி.. ராசிபுரம் இளைஞரின் தன்னம்பிக்கை!

சொமேட்டோ ஊழியர் ராஜதுரை

சொமேட்டோ ஊழியர் ராஜதுரை

Rasipuram zomato worker | பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாகவும், குடும்ப வறுமையின் காரணமாகவும் சைக்கிளில் சென்று உணவு டெலிவரி செய்யும் ராஜதுரை கிடைக்கும் நேரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rasipuram, India

ராசிபுரத்தில் சைக்கிளில் சென்று உணவு சப்ளை செய்யும் சொமோட்டோ ஊழியர் பலருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

நாமக்கல் மாவட்டம் திருவிக நகரைச் சேர்ந்த ராஜதுரை(26), ராசிபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி., இயற்பியல் படிப்பை முடித்துள்ளார். இவரின் தந்தை சென்னையில் காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருவதால், ராஜதுரை ராசிபுரத்தில் மனைவி மற்றும் தாயுடன் வசித்து வருகிறார்.

குடும்ப வறுமையின் காரணமாக கடந்த ஒன்னரை ஆண்டுகளாக சொமோட்டோ உணவு சப்ளை செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். டிஎன்பிஎஸ்சி., தேர்வுக்கு படித்து வரும் ராஜதுரை இதர்கு முன்பு செல்போன் கடை ஒன்றில் மாதம் 11 ஆயிரம் ரூபாய்க்கு பணிக்கு சேர்ந்தார். அங்கு இருக்கும் போது பணிசுமை காரணமாக டிஎன்பிஎஸ்சி., தேர்வுக்கு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் அந்த வேலையை விடுத்து உணவு சப்ளை செய்யும் ஊழியராக மாதம் 12 ஆயிரம் ரூபாய்க்கு பணிக்கு சேர்ந்துள்ளார்.இந்த பணியில் பணிச்சுமை குறைவாக இருப்பதாகவும், இதனால் டிஎன்பிஎஸ்சி., தேர்வுக்கு தன்னால் படிக்க முடிவதாகவும் கூறுகிறார் ராஜதுரை.

Zomoto ஊழியர்கள் குறித்த நேரத்தில் தங்களது இலக்குகளை அடைய பைக்குகளில் செல்வது தான் வழக்கம். ஆனால் ராஜதுரை கடந்த ஒன்னரை ஆண்டுகளாக சைக்கிளில் சென்று உணவு சப்ளை செய்து வருகிறார். ராசிபுரம் பகுதியில் மட்டும் உணவு சப்ளை செய்வதால் இதுவரையில் சைக்கிளில் செல்வதால் காலதாமதம் ஆகிறது என ஒரு வாடிக்கையாளர்கள் கூட கூறியது இல்லை என்கிறார் ராஜதுரை. சைக்கிளில் சென்றாலும் குறித்த நேரத்தில் உணவு சப்ளை செய்து விடுவதாகவும் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள் ஒன்றை வாங்கி இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு பைக்கில் வந்த மதுபோதை ஆசாமி ஒருவர் இவர் மீது மோதியதில் மின்சார சைக்கிளுக்கும் பழுது ஏற்பட்டதால், தற்போது பழைய சைக்கிளில் சென்று உணவு சப்ளை செய்து வருகிறார். ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்பு உணவு சப்ளை செய்யும் தொழிலிலை துவங்கிய போதே சைக்கிளில் சென்று தான் உணவு சப்ளை செய்யும் தொழிலைத் தொடங்கி இருக்கிறார்.

இது குறித்து பேசிய ராஜதுரை, பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாகவும், குடும்ப வறுமையின் காரணமாகவும் சைக்கிள் தான் பெஸ்ட் என தெரிவித்தார். டிஎன்பிஎஸ்சி., தேர்வில் வெற்றி பெறவும், குடும்ப சூழல் காரணமாக உணவு சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறும் ராஜதுரை பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார்.

செய்தியாளர்: சுரேஷ், ராசிபுரம்.

First published:

Tags: Food Delivery App, Local News, Namakkal, Rasipuram, Zomato