ஹோம் /நியூஸ் /Namakkal /

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது இரண்டு முறை ஏறி இறங்கிய கார் - பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது இரண்டு முறை ஏறி இறங்கிய கார் - பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

சிறுவன் மீது ஏறிய கார்

சிறுவன் மீது ஏறிய கார்

Namakkal : கார் ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்த சிறுவன் ராசிபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் மீது கார் ஒன்று இரண்டு முறை ஏறி இறங்கியது தொடர்பாக பதபதைக்கவைக்கும்  சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராசிபுரத்தை அடுத்த பட்டணம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரின் 2 வயது மகன் தருண். தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது  அவ்வழியாக காரை ஓட்டி வந்த நபர் குழந்தை வருவது தெரியாமல்  காரை ரிவேஸ் எடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது சிறுவன் மீது காரின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. மீண்டும் காரை முன் எடுத்தார். அப்போதும் சிறுவன் மீது கார் ஏறி இறங்கியது. இதனால், பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு ராசிபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

சிறுவன் மீது கார் ஏறியது.

Must Read : கொடுங்கையூர் லாக்கப் டெத் - காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்

இந்த சம்பவம் குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

செய்தியாளர் - சுரேஷ், ராசிபுரம்.

First published:

Tags: Car accident, Namakkal, Rasipuram