ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

நாமக்கல்லில் வீடு புகுந்து ரூ. 25 லட்சம் ரொக்கம்.. 18 சவரன் கொள்ளை - மர்ம கும்பல் அட்டூழியம்

நாமக்கல்லில் வீடு புகுந்து ரூ. 25 லட்சம் ரொக்கம்.. 18 சவரன் கொள்ளை - மர்ம கும்பல் அட்டூழியம்

கொள்ளையடிக்கப்பட்ட வீடு

கொள்ளையடிக்கப்பட்ட வீடு

பள்ளிபாளையம் அருகே பட்டப்பகலில் ஜவுளி உற்பத்தியாளரையும் அவரது மனைவியும் கட்டி போட்டு 18 சவரன் நகை மற்றும் 25 லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Namakkal, India

  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் மிகப்பெரிய அளவில் விசைத்தறிக்கூடங்கள் மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில்களை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள மகன்கள் மருமகள்கள் வெளியே சென்ற நிலையில் மணி மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோர் தனியாக இருந்துள்ளனர்.

  அப்பொழுது  மாலை வீட்டிற்கு உறவினர்கள் வருவது போல் காரில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிலிருந்த மணி மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோரை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 25 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 18 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் பின்னர் கணவன் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் .

  அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜாஸ்ரீ நேரில் பார்வையிட்டு கணவன் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  Also see... திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை.. மீறினால் பறிமுதல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  இதனை தொடர்ந்து தனிப்பிரிவு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

  செய்தியாளர்: ரவிசந்திரன், நாமக்கல்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Namakkal, Robbery, Textiles