ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

அறிவியல் கண்காட்சியில் அசத்திய நாமக்கல் அரசு பள்ளி மாணவர்கள்...

அறிவியல் கண்காட்சியில் அசத்திய நாமக்கல் அரசு பள்ளி மாணவர்கள்...

அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

Namakkal District News : நாமக்கல் அரசு தொடக்க பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் குச்சிக்கல் புதூர் காலனி பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

இதில் பள்ளியில் உள்ள 67 மாணவர்களும் கலந்துகொண்டு, தங்களுடைய படைப்புகளை காட்சிப்படுத்தி செய்முறை விளக்கம் அளித்தனர்.

இதில் அறிவியல் மாதிரிகள், தமிழர்களின் கட்டிடக் கலை, பாரம்பரிய விளையாட்டுகள், பாரம்பரிய உணவு வகைகள், கணித உபகரணங்கள், தோட்டம் போன்றவை சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிகழ்வை வட்டார கல்வி அலுவலர் சந்திரவதனா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சசிராணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக செய்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் வாழ்த்துகளை வழங்கினர். மேலும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்து.

இதையும் படிங்க : நாமக்கல் மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை தெரியுமா?

இந்த அறிவியல் கண்காட்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கல்பனா, துணை தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் சக்திவேல் படைப்புகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகளை நன்கொடையாக வழங்கினார்.

நாமக்கல் செய்தியாளர் - பிரதாப்

First published:

Tags: Local News, Namakkal