நாமக்கல் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்காக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கணைகளுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும். இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கணைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்கள வருகிற 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
ஏற்கனவே அஞசல் வழியில், நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும், மீண்டும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தினை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். தகுதியான விண்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
Must Read : கும்பக்கரை அருவிக்கு குளிக்கப் போறீங்களா? - இதை படிச்சிட்டு போங்க
இறுதி யாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் அவர்களுக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal, Scholarship, Sports Player