ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

நதிநீர் திட்டத்தை வலியுறுத்தி நாமக்கல்லில் மாரத்தான் போட்டி..

நதிநீர் திட்டத்தை வலியுறுத்தி நாமக்கல்லில் மாரத்தான் போட்டி..

மாரத்தான் போட்டி

மாரத்தான் போட்டி

Marathon competition : நதி நீர் இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி நாமக்கல்லில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மகளிர் மற்றும் சிறுவர்கள் பங்குபெற்ற மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

மேட்டூர் காவிரி உபரி, சரபங்கா நதி, திருமணிமுத்தாறு உள்ளிட்ட நீர் நிலைகள் வழியாக பாயும் நீரானது கடலில் சென்று வீணாக கலப்பதாகவும், காவிரி ஆற்று‌ நீரை சரபங்கா ஆறு‌ மற்றும் திருமணிமுத்தாறு ஆறுகளுடன் இணைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாமக்கல்லில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருச்சி வேலுசாமி தொடங்கி வைத்தார்.

10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் ஆண்களுக்கான மாரத்தான் பெண்களுக்கான 5 கிலோ மீட்டர் என்றும், சிறுவர்களுக்கான 2 கிலோ மீட்டர் தூரம் என 4 பிரிவுகளாக இந்த போட்டி நடந்தது. நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கிய இந்த மராத்தான் போட்டி நகரின் முக்கிய சாலைகளின் வழியாக நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Namakkal