ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

ராசிபுரம் அருகே தலைகுப்புற கவிழ்ந்த லோடு வேன் - 8 பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

ராசிபுரம் அருகே தலைகுப்புற கவிழ்ந்த லோடு வேன் - 8 பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

விபத்து ஏற்பட்ட பகுதி

விபத்து ஏற்பட்ட பகுதி

Rasipuram Accident | நாமகிரிப்பேட்டை அருகே சென்றுபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆத்தூர் செல்லும் சாலையின் நடுவே ஜீப் தலைக்குப்பற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே லோடு வேனில் கூலி வேலைக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 14 பெண்கள் படுகாயமடைந்தனர்.

ராசிபுரம் அடுத்த மெட்டாலா, குட்டக்காடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தண்ணீர்பந்தல்காடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வெங்காயம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் வழக்கம்போல் 14-க்கும் மேற்பட்ட பெண்கள் லோடு ஜீப்பில் பணிக்கு சென்றனர். அப்போது அவர்கள் சென்ற ஜூப்  நாமகிரிப்பேட்டை அருகே சென்றுபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆத்தூர் செல்லும் சாலையின் நடுவே ஜீப் தலைக்குப்பற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 14 பெண்கள் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 8 பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கோர விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒட்டுநர் குறித்த முழு விவரம் தெரியவில்லை

செய்தியாளர்: சுரேஷ்

First published:

Tags: Local News, Namakkal