ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் ஐப்பசி தேர் திருவிழா தொடங்கியது..!

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் ஐப்பசி தேர் திருவிழா தொடங்கியது..!

 நித்திய சுமங்கலி மாரியம்மன்

நித்திய சுமங்கலி மாரியம்மன்

Rasipuram | ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் திருவிழா இன்று தொடங்கியது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Rasipuram, India

  ராசிபுரத்தில் நித்யசுமங்கலி மாரியம்மனின் திருவிழா பூச்சாட்டுதலுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதில் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனுக்கு பூச்சாட்டி வழிபட்டனர்.

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்திபெற்றது நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் எப்போதும் அம்மனின் கழுத்தில் நிலையாக தாலி இருந்து வருவதால் இதற்கு நித்திய சுமங்கலி என்று பெயர் பெற்றது . வருடந்தோறும் ஜப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

  இந்த ஆண்டு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது மாரியம்மன் திருவிழா முன்னதாக ஊரின் முக்கிய பிரமுகர்கள் கையில் பூக்களுடன் அருள்மிகு செல்லாண்டியம்மன் ஆலயத்திற்கு சென்று  பூக்களால் அம்மனுக்கு அபிசேகங்கள் செய்து பின்னர் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வந்து அங்கு பொதுமக்கள் வேண்டுதலுடன் கொண்டுவந்திருந்த பூக்களால் அம்மனை அலங்கரித்து அபிசேக ஆராதனை செய்தனர்.

  Also see... ஐப்பசி மாதம் துலாம் ராசியில் நீசமாகும் சூரியன் - ஆபத்தா அல்லது ஆளுமையா.!

  பின்னர் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக 1008 கிலோ பூக்கள் கொண்டு வந்திருந்த பூக்களால் அம்மனை அலங்கரித்து பல்வேறு பூஜைகள் செய்யபட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை காண ராசிபுரம்,  பட்டணம், வெண்ணந்தூர்,  நாமகிரிபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளான பொதுமக்கள் வந்திருந்தனர்.

  செய்தியாளர்: சுரேஷ், ராசிபுரம்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Car Festival, Hindu Temple, Rasipuram