Home /News /namakkal /

தமிழ்நாட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

தமிழ்நாட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

ராமதாஸ் அத்வாலே

ராமதாஸ் அத்வாலே

அண்டை மாநிலமான கேரளா ஆயுர்வேத கேஃபிட் ஸ்க்ரீன் துறையில் பெயர் பெற்றுள்ளது போல, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான துறையில் தமிழ்நாடு பெயரை உருவாக்க வேண்டும் - ராம்தாஸ் அத்வாலே

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    தமிழ்நாட்டில் மிக விரைவில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ராசிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவர்களிடையே உறுதியளித்தார்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு கல்லூரியில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். 3 நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் இறுதி நாளான நேற்று சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை அமைச்சர் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டார். இதில் மாணவர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் மிக விரைவில் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

    மேலும், “பாரம்பரிய அறிவியல் ஆரோக்கிய அணுகுமுறைகளான யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான தேவைகள் தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் இயற்கை மருத்துவ தேவைகளுக்கு சிறந்த அங்காடி கூடமாகும். அப்பகுதியை சேர்ந்த மக்கள் இயற்கை மருத்துவத்தையே மேற்கொண்டு வருகின்றனர்.” என கூறினார்.

    மேலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை அமைக்க கூடிய சாத்திய கூறு அறிக்கைகளை ஆய்வு செய்து நாமக்கல் மற்றும் அண்டை பகுதிகளை மருத்துவ சுற்றுலா மண்டலமாக மேம்படுத்த சுற்றுலா அமைச்சகத்திற்கு முன்மொழிவோம் எனவும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், “சமூகத்தின் இளைஞர்கள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த பிராந்தியத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்ய எங்கள் அமைச்சகம் ஆர்வமாக உள்ளது.” என தெரிவித்தார்.

    இதையும் வாசிக்க: 'ப்ளூ காய்ச்சல் பரவலை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' - ஓபிஎஸ் வலியுறுத்தல்

    அண்டை மாநிலமான கேரளா ஆயுர்வேத கேஃபிட் ஸ்க்ரீன் துறையில் பெயர் பெற்றுள்ளது போல, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான துறையில் நீங்கள் பெயரை உருவாக்க வேண்டும் என மாணவர்களிடம் உரையாற்றினார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Ayurvedic doctors, Namakkal, Union minister, Union Minister Ramdas Athawale

    அடுத்த செய்தி