ஹோம் /நியூஸ் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க

நாமக்கல் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க

மின் தடை

மின் தடை

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, இளநகர் துணை மின் நிலையங்களில் நாளை (20-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அங்கே மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை பகுதிகள்:

திருச்செங்கோடு நகராட்சி பகுதி முழுவதும், கருவேப்பம்பட்டி, ஆத்தூராம்பாளையம், நாராயணம்பாளையம், அம்மாபாளையம், சீனிவாசம்பாளையம், தேவனாங்குறிச்சி, கீழேரிப்பட்டி, சிறுமொளசி, அணிமூர், ஆண்டிபாளையம், தோக்கவாடி, வரகூராம்பட்டி, செங்கோடம் பாளையம் முதல் சிந்தம்பாளையம் வரை மற்றும் கைலாசம்பாளையம் முதல் திருமங்கலம் வரை உள்ள பகுதிகளில் மின்சாரம் மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : சுருளி அருவி தெரியும்... இந்த சின்ன சுருளி அருவி தெரியுமா!? - தேனியில் மிஸ் பண்ணக்கூடாத அழகான இடம்!

அதேபோல, இளநகர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தொண்டிப்பட்டி, செக்குப்பட்டி, பாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, செருக்கலை, பெரியமணலி, கோக்கலை மற்றும் மாணிக்கம் பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என, திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown