நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, மெட்டாலா உள்ளிட்ட துணை மின்நிலையத்தில் நாளை (22-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்தடை பகுதிகள்:
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி துணை மின்நிலையத்திதிற்கு உட்பட்ட வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்ப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர், கொண்டிசெட்டிபட்டி, அரசு அலுவலர் குடியிருப்பு மற்றும் மகரிஷி நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதேபோல், காளப்பநாயக்கன்பட்டி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட, காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல் மற்றும் துத்திக்குளம் பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது.
Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?
மேலும், ராசிபுரம் கோட்டம், மெட்டாலா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பிலிப்பிகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜபாளையம், உடையார்பாளையம், கார் கூடல்பட்டி, மெட்டாலா, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பஞ்சோலை, பெரியகுறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர் கோம்பை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown