ஆங்கில புத்தாண்டின்போது பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் குதூகல கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. புத்தாண்டு பாதுகாப்புக்கு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் ஈடுபடுவார்கள்.
அதுமட்டுமின்றி, பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடங்களில் வெளியில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தி வாகனம் ஓட்டுதல் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுதல் போன்ற செயல்களை செய்தால் கைது நடவடிக்கை எனவும், மற்றவர்களின் உணர்வுகள் புண்படாத வகையில் கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது.
இதையும் படிங்க : ராசிபுரத்தில் அடித்த ஜாக்பாட்.. 10 ரூபாய் டீ சர்ட் வாங்க முண்டியடித்த இளைஞர்கள்!
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், நாமக்கல் டி.எஸ்.பி.சுரேஷ்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “நாளை (31.12.2022) இரவு நாமக்கல் உட்கோட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நாமக்கல் நகரில் 20 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட உள்ளது. பொதுமக்கள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் வாகனத்தை இயக்கினால் கைது செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு வழக்கு பதிவு செய்யப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதுமட்டுமின்றி, நாமக்கல் நகர் பகுதியில் புதிதாக அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் சாலைகளில் அதிவேகமாக வாகனத்தை இயக்கினால் எளிதில் கண்டறிய முடியும். பைக் ரேஸ் மற்றும் கொண்டாட்டத்தின்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணான 100க்கு தொலைபேசி மூலம் அழைக்கலாம்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர் : பிரதாப் - நாமக்கல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal, New Year 2023