முகப்பு /செய்தி /நாமக்கல் / மாமனார் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்... மாற்றுத்திறனாளி பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

மாமனார் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்... மாற்றுத்திறனாளி பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Namakkal district News : மாமனார் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கூறி மாற்றுத்திறனாளி பெண் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காக்காவேரி அருகே வடக்கு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான மாற்றுத்திறனாளி  பெண். இவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அந்த பெண் அளித்த மனுவில், சிங்களாந்தபுரத்தை சேர்ந்த மனோகரன் என்பவருடைய மகன் சேகருக்கும் 2020ஆம் ஆண்டு, கொடுமுடியில் திருமணம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, கூட்டுக் குடும்பமாக சிங்களாந்தபுரத்தில் வாழ்ந்து வந்ததாகவும். குழந்தை இல்லாததால் தன்னுடைய மாமனார் மனோகரன் அடிக்கடி தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறார். இது குறித்து கணவரிடமும், மாமியாரிடமும் முறையிட்டால் மாற்றுத்திறனாளி என்று கூட பாராமல் தன்னை அடித்து துன்புறுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கணவரின் தந்தை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தன்னை துன்புறுத்துவதோடு அடித்து சித்திரவதை செய்கிறார்.

இந்நிலையில் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் கடந்த 3 மாதமாக தனது சொந்த ஊரில் வசித்து வருவதாக தெரிவித்துள்ள அவர், தன்னுடைய துணிகள் மற்றும் சீர்வரிசையாக வழங்கப்பட்ட கட்டில், மெத்தை, பீரோவை பெற்றுத் தரக்கோரி ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாற்றுத்திறனாளி  பெண் தர்ணா.

இந்நிலையில், தனக்கு உரிய நீதிகிடைக்க வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது,  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க கூட்டிச் சென்றனர்.

Must Read : போதைக்காக ஆன்லைனில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்திய இளைஞர்கள்... ஈரோட்டில் கைது

மாற்றுத்திறனாளி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் - ரவிக்குமார்.

First published:

Tags: Namakkal, Physically challenged, Sexual harassment