தமிழகம் முழுவதும் உள்ள பழமையான பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுவது வழக்கம். ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
அன்றைய தினம் பெருமாள் சொர்க்கவாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பெருமாளை வணங்கும் பக்தர்கள் பகல் பத்து, ராப்பத்து விரதமிருந்து பரமபத வாசல் வழியாக வந்து பெருமாளை வணிங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாள் வைகுண்ட ஏகாதசி நாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி வரும் 02.01.2023 அன்று வைகுண்ட ஏகாதசி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு நாமக்கல்லில் அமைந்துள்ள மிகவும் பழமையான அரங்கநாதர் திருகோவிலில் வரும் ஜனவரி 2 திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி அரங்கநாதர் திருக்கோவிலில் வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்றைய தினம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் காண வரும் பக்தர்களுக்கு தனியார் பங்களிப்புடன் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதற்காக 54 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தனியார் திருமண மண்டபத்தில் துவங்கி நடைப்பெற்று வருகிறது. இதற்காக 1000 கிலோ கடலை மாவு, 500 கிலோ சர்க்கரை, 500 கிலோ நெய், 1000 லிட்டர் கடலெண்ணெய், 25 கிலோ முந்திரி, 25 கிலோ திராட்சை மற்றும் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் உள்ளிட்டவை 5 கிலோ உள்ளிட்ட பொருட்களை கொண்டு லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் : பிரதாப் - நாமக்கல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal